நாலடி இன்பம்- 13. வாழ்தலின் ஊதியம்! இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 28 செட்டம்பர் 2019 கருத்திற்காக.. நாலடி இன்பம்- 13. வாழ்தலின் ஊதியம்! நட்புநார் அற்றன நல்லாரும் அஃகினார் அற்புத் தளையும் அவிழ்ந்தன – உட்காணாய்; வாழ்தலின் ஊதியம் என்னுண்டாம்? வந்ததே ஆழ்கலத் தன்ன கலி. (நாலடியார் பாடல் 12) பொருள் : நட்புகளும் பிணைப்பு அறுந்தன; நல்லோரும் அகன்றனர்; அன்புக் கட்டுகளும் அவிழ்ந்தன; உனக்குள்ளே ஆராய்ந்து பார். ஆழ்கடலில் கப்பல் மூழ்கும்போது கப்பலில் உள்ளோரால் ஏற்படும் அழுகுரல் ஓசைபோல் சுற்றத்தார் அழுமோசை வந்தது அல்லவா? அப்படியானால் வெறுமனே வாழ்ந்து என்ன பயன்? சொல் விளக்கம் : நட்பு=உறவாகிய; நார்=பாசங்களும்; அற்றன=நீங்கின; நல்லாரும்=மகளிரும்; அஃகினார்=அன்பிற்குறைந்தார்; அற்பு= அன்பாகிய, தளையும்=பந்தங்களும்; அவிழ்ந்தன= நெகிழ்ந்தன; உள்= உன்னுள்ளே; காணாய்=பாராய்; ஆழ்= முழுகும்; கலத்து அன்ன=கப்பலோசைபோல்; கலி= உறவினர் அழுமோசை; வந்ததே=வந்ததல்லவோ? (ஆதலால்); வாழ்தலின்= வாழ்தலினால்; ஊதியம்=ஆதாயம்; என்=என்ன; உண்டாம்=உண்டாகும்? பிறந...