Posts

பெரியார் படி – சு.ஒளிச்செங்கோ

Image
 அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         23 ஏப்பிரல் 2019         கருத்திற்காக.. பெரியார் படி  “பெரியார் எனும் சொல் இணைப்பரும் பெருமையையும், ஒப்புச் சொல்வதற்கு அரிய பெருமையுடையவர் என்பதை உணர்த்தும் சொல்லாகும். அச்சொல் சுட்டும் பொருளுக்கு ஏற்பவே பெரியார் திகழ்ந்தார்; இன்றும் ஒளிர்ந்துவருகிறார். பொருள் புலப்பட பொருள் தோன்ற கூறுதலை புலன்வனப்பு என்பர். அந்த அரிய  புலன்வனப்பைப் பெரியாரின் எழுத்திலும், பேச்சிலும் காணலாம். பெரியாரின் உரைநடை என்பது தனி வகைப்பட்ட உரை நடை  வண்ணமாகும். எந்த தமிழ்ப் புலமையாளர்களுக்கும் வாய்க்கப் பெறாத – பெரியாருக்கு மட்டும் இயல்பாக வாய்க்கப்பெற்ற பெரும்பேறாகும். கழுத்துப் பிடி கொடுத்தாலும், எழுத்துப்பிடி கொடுக்கக்கூடாது என்பது கொங்கு நாட்டு சொலவமாகும். பெரியார் பேசும்போதும், எழுதும்போதும் சொற்களின் புலப்பாட்டைத் தெரிந்துகொண்டு எழுத்துப் பிடி கொடுக்காமல் எழுதவும் பேசவும் வல்லவர். அவரது எழுத்திலும் பேச்சிலும் எண்ணற்ற பழமொழிகளைக் காணலாம். அவை சுவைமிக்கதாகவும், சுட்டுர...

காணாமல் போவர்! – இலக்குவனார் திருவள்ளுவன்

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         17 ஏப்பிரல் 2019         கருத்திற்காக.. காணாமல் போவர்!   நேற்றுவரை வந்தவர்கள் நாளை காணாமல் போவர் விரல் மை காயும் முன்னர் மாயமாய் மறைவர் மறந்து போய் நன்றி சொல்ல வரலாம் சிலர் தவறாமல் பலர் தொகுதிப் பக்கம் காணாமல் போவர் நம் நாட்டுத் தேர்தலின் சிறப்பு இதுதான் இருந்தாலும் நாம் தவறாமல் வாக்களிப்போம்! இலக்குவனார் திருவள்ளுவன்

வியர்வையே! – இலக்குவனார் திருவள்ளுவன்

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         17 ஏப்பிரல் 2019         கருத்திற்காக.. வியர்வையே! வியர்வையே  வியர்வையே  உனக்கிது  முறையோ அயர்விலா  துழைப்போன்உடலில்   பிறப்பாய் உள்ளத்தில்  சிறிதும்  நன்றியை  எண்ணாய் கள்ளமாய்  ஏய்ப்போன்  பேழையைச்  சேர்வாய் காலமும்  மாறும்  கோலமும்  மாறும் ஞாலமும்  நம்மை  வளமாய்க்  காணும் நாளும்  உழைப்போம்  மேலும்  உயர்வோம் வாழும்  உலகில்  வளத்தைக்  காண்போம் என்பன  நினைக்கும்  ஏழையை  ஏய்ப்பாய் உண்பதைப்  பறிப்பாய்  உடுப்பதைக்  களைவாய் வியர்வை  என்னும  விலையை  வினவும் அயர்வை  அறியா  முதலையை  வளர்ப்பாய் கொழுக்கக்  கொழுக்கச்  செழித்திடச்  செய்வாய் கருவைத்   தந்தோன்  கருகிச்  சாகிட உருவைக்காணான்  பெருகி  உயர்ந்திட உதவும்  வியர்வை...

அவர்கள் வருகிறார்கள்! – தமிழ்சிவா

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         16 ஏப்பிரல் 2019         கருத்திற்காக.. அவர்கள் வருகிறார்கள்!  வினையை விதைத்துத் திணையை அறுத்தவர்கள் வருகிறார்கள் வருகிறார்கள் குறிஞ்சியைக் குப்பையாக்கினார்கள் முல்லையை ஆதியோகி ஆக்கினார்கள் மருதத்தை உந்துகளில் ஏற்றினார்கள் நெய்தலைக் கூவமாக்கினார்கள் பாலையைப் பாழாக்கினார்கள் நாளெல்லாம் பொழுதெல்லாம் வினைகளை விதைத்துத் திணைகளை அறுத்தவர்கள் வருகிறார்கள் வருகிறார்கள் கானுறு வேங்கையைக் ‘காசு’ க்குப் பிடித்தார்கள் கழிவுப் பொந்துகளில் எலிகளென வளர்த்தார்கள் வெண்குருதியைக் குடத்தினில் வாங்க நம்குருதியையே சிந்த வைத்தார்கள் ஊன்துவை அடிசில் உண்டு தேள்கடுப்பன்ன ஊறல் மாந்தி தெளியாச் சிந்தனை கொண்டு திரண்டு வருகிறது கூட்டம் கூடவே ஆட்டம் அணிபெற கோட்டை கிலிபெற நாட்டினர் நலிவுற நாட்டம் கொண்டே வருகிறார்கள் வருகிறார்கள் வயல்கள் பொடிபட வாழ்க்கை அடிபட அடிப்படை அலைவுற குடிப்படை கொண்டு வருகிறார்கள் வருகிறார்கள் ஏழையர் நிலைகெட பா...

சந்திப்பு – இலக்குவனார் திருவள்ளுவன்

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         10 ஏப்பிரல் 2019         கருத்திற்காக.. சந்திப்பு   எண்ணத்தின்  சந்திப்பு  நட்பாய்  மலரும் உள்ளத்தின்  சந்திப்பு  காதலாய்க்  கனியும் தாய்  தந்தை  சந்திப்பு  மகவை  ஈனும் ஆய்வு  செயல்  சந்திப்பு  அறிவைப்  பேணும் அறிஞரின்  சந்திப்பு  ஆக்கம்  அளிக்கும் கலைஞரின்  சந்திப்பு  ஊக்கம்  அளிக்கும் மறவரின்  சந்திப்பு  வீரம்  ஊட்டும் அறத்தார்  சந்திப்பு  வறுமை  ஓட்டும் எழுத்தின்  சந்திப்பு  சொல்லாய்  மாறும் சொல்லின்  சந்திப்பு  வரியாய்  மாறும் வரியின்  சந்திப்பு  கவியாய்  மாறும் கவியின்  சந்திப்பு  காவியம்  ஆகும் உழைப்போர்  சந்திப்பு  உயர்வைச்  சேர்க்கும் விலைமகள்  சந்திப்பு  இழிவைச்  சேர்க்கும் முதலாளி  சந்திப்பு  வறுமைய...