Posts

திருக்குறளுக்கு உரை திருக்குறளே! – பி.என்.(இ)டயசு

Image
இலக்குவனார் திருவள்ளுவன்         03 மார்ச்சு 2019         கருத்திற்காக.. திருக்குறளுக்கு   உரை   திருக்குறளே !  1/9        பின்பலம்   இன்றிக்   குறளாசான்   தன்பலம்       பின்புலமாய்க்   கொள்ளுமென்   ஆய்வு முப்பாலுக்கு உரைகள் பல உள. சில உரைகள் நல்ல விளக்கம் தருகின்றன. பல உரைகள் குழப்பம் தருகின்றன. முப்பாலுக்குத் திருவள்ளுவர் உள்ளத்தை எதிரொலிக்கும் பொருள் காண நற்றுணை ஆவது திருவள்ளுவமே என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன்  மேற்கொள்ளப் படுவது  இந்த ஆய்வு. ஃபிரான்சு நாட்டில் அகாதெமி ஃபிரான்செசு என்ற ஓரமைப்பு உள்ளது. அந்த அமைப்பின் அனுமதியின்றி எந்த ஒரு புதுச்சொல்லும் ஃபிரெஞ்சு அகராதியில் நுழைய முடியாது. ஆனால் ஆங்கில அகராதி, எம்மாநிலத்தவரையும் வரவேற்கும் தமிழன் போன்று, எந்த மொழியில் இருந்து வரும் புதுச்சொல்லையும் மகிழ்ச்சியுடன் வரவேற்கும் இயல்புடையது.  இந்திய மொழிகள் ஆங்கிலத்திற்கு வழங்கிய சொற்களை அகரநிரல் பட...

சங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை: 1/3 அ. அரவரசன்

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         28 பிப்பிரவரி 2019         கருத்திற்காக.. சங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை: 1/3 மாந்த இனத்தின் வாழ்வியல் கூறுகளில் வனவியல் எவ்வாறு ஒன்றியும் இணைந்தும் ஊடுருவியும் உள்ளது என்பதை சங்கத் தமிழ் இலக்கியம் எவ்வகையில் எடுத்துரைக்கின்றது என்பதை பேராழியின் துளி நீரைச் சுவைத்துப் பார்க்கும் நோக்கில் நவில்வதே இக்கட்டுரை. மனித இனம் முதலில் தோன்றிய பகுதி கடல்கொண்ட தமிழகத்தின் தென்பகுதி என்றும் அதன் பெயர் ‘இலெமூரியா’ என்றும் அதன் வரலாற்றை நுணுகி ஆராய்ந்து வரையறுத்த வரலாற்று ஆய்வறிஞர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் லெமூரியா என்பது ‘இலெமூர்’ என்ற குரங்கின் பெயர்தான் என்பதை நோக்கும் போது பிற்காலத்தில் மனித இனத்தின் மூதாதையர் குரங்குதான் என்று  தார்வின் என்ற மேனாட்டு மாந்தவியல் அறிஞனின் கூற்று ஒத்துப் போவதை உணரலாம்.  வனவியல் என்பது தாவரவியல், விலங்கியல், பறவையியல், பூச்சியியல், நுண்ணுயிரியல். இயற்கையின் சூழலியல் சுற்றுப்புறவியல் எனப் பல்கிபெருகிய அனைத்தையும் உள்ளடக்கிய ‘பேரியல...