Posts

சாக்கடை தருமோ நறுமணமே! – ச.சுதாகர்

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         13 செப்தம்பர் 2018         கருத்திற்காக.. சாக்கடை  தருமோ நறுமணமே! உள்நோக்கம்  தீதாய் ஊருக்கு நல்லதாய் சொல்செயல் காட்டிடும் சூது மனமே நோக்கம் மறைத்திடும் நுட்பம் அறிந்தாலும் சாக்கடையும் என்றும் தருமோ நறுமணமே ச.சுதாகர் 

மறுமலர்ச்சித் தமிழறிஞர்கள் – முன்னுரை

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         05 மே 2018         கருத்திற்காக.. மறுமலர்ச்சித் தமிழறிஞர்கள் முன்னுரை பக்தி இலக்கியக் காலக் கட்டத்தைத் தமிழின் மறுமலர்ச்சிக் காலம் என்பர். அதன் பின்னர் ஏற்பட்ட அயலவர் படையெடுப்பாலும், ஆரியப்பண்பாட்டு மொழியான சமசுகிருதக் கலப்பாலும் தமிழின்நிலை தாழ்வுற்றது. மீண்டும் இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் தமிழை மீட்டுருவாக்கும் பணியினைப் புலிப்பாய்ச்சலோடு தொடங்கியவர்கள் தமிழறிஞர்களே ஆவர். பிரித்தானியர் ஆட்சியில் நான்கு தேசிய இனத்தவரின் நிலமாக சென்னை மாகாணம் இருந்தது. அதில் ஒன்றான தமிழ்த் தேசிய இனம் மட்டுந்தான் ஆரியப் பண்பாட்டு மொழியான சமசுகிருதத்தையும், இந்தியையும் எதிர்த்துப் போரிட்டது. இதை முன் நின்று தொடங்கி வைத்த பெருமை தமிழறிஞர்களையே சாரும். தமிழ் மொழி, தமிழர் இனம், தமிழர் தாயகம் ஆகிய மூன்றும் தமிழ்த் தேசிய இனத்தின் அடிக்கற்கள். தமிழ்மொழி மீட்புப் போராட்டத்தில் முன் நின்றவர்கள்தாம் தமிழினத்தை ‘திராவிடர்’ என்று திரித்துக் கூறியதையும் கடுமையாக எதிர்த்தனர். அத்தோட...

தமிழ் வளர்கிறது! 19-21 : நாரா.நாச்சியப்பன்

Image
அகரமுதல 224  தை 22 – 28, 2049, பிப் .4 - 10 , 2018 இலக்குவனார் திருவள்ளுவன்         04 பிப்பிரவரி 2018         கருத்திற்காக.. (தமிழ் வளர்கிறது! 16-18 : தொடர்ச்சி)   தமிழ் வளர்கிறது! 19-21 :  ஆங்கிலத்தில் கணக்கெழுதும் வேலை பார்ப்போன் அவரசத்தில் ஒருபிழையை எழுதி விட்டால் பாங்கினிலே பணிசெய்யத் தகுதி யில்லை படிப்பில்லை என்றவனை விலக்கி வைப்பார் ! ஓங்கிவளர் தமிழ்மொழியில் கலைப டைப்போர் உண்டுபண்ணும் பெரும்பிழைகள் ஒன்றி ரண்டா? ஈங்கிதனைக் கூறிடவோர் ஆளும் இல்லை எழுத்தாளர் பிழைத்தமிழும் கொழுத்துப் போச்சாம் ! (19) அரைப்படிப்புக் காரரெல்லாம தமிழ்வ ளர்க்கும் ஆர்வமுள்ள எழுத்தாள ராகி விட்டார் ! திரைப்படத்தின் எழுத்தாள ரெல்லா மிந்தத் திருநாட்டில் அறிஞர்களாய் உலவு கின்றார் ! உரைப்படிப்புப் பண்டிதரோ புதுமை யென்றால் ஒதுங்குகின்றார் ! நூற்பொருளில் திருத்தம் சொன்னால் கறைப்படுத்தி விட்டோமென் றலறு கின்றார் ! காண்பதெல்லாம் விந்தைகளே ! தமிழர் நாட்டில்!...

அகல் விளக்கு – மு.வரதராசனார். 5.

Image
அகரமுதல 224  தை 22 – 28, 2049, பிப் .4 - 10 , 2018 இலக்குவனார் திருவள்ளுவன்         04 பிப்பிரவரி 2018         கருத்திற்காக.. ( அகல் விளக்கு – மு.வரதராசனார். 4. தொடர்ச்சி ) அத்தியாயம்  2   சந்திரனுடைய தந்தையார் சாமண்ணா, பரம்பரை நிலக்கிழார் குடும்பத்தைச் சார்ந்தவர். சந்திரனுடைய பாட்டனார், இருந்த நிலங்களோடு இன்னும் பலகாணி நிலங்களைச் சேர்த்துக் குடும்பத்திற்குப் பெருஞ்செல்வம் வைத்துச் சென்றார். சாமண்ணா குடும்பத்தில் பெரியபிள்ளை; அவருடைய தம்பி – சந்திரனுடைய சிற்றப்பா – தமக்கு வந்த சொத்தை வைத்துக் காக்கும் ஆற்றல் இல்லாதவர்; நில புலங்களைக் கவனிப்பதை விட்டுவிட்டு, நகரங்களைச் சுற்றி அங்குள்ள ஆடம்பர வாழ்வில் பற்றுக் கொண்டார். வாரத்தில் மூன்று நாட்களாவது நகரத்தில் கழித்துவிட்டு மற்ற நாட்களைத் தம் சிற்றூரில் சலிப்போடு கழிப்பார். அப்போதும் நிலம் எப்படி தோப்பு எப்படி என்று கவனிக்காமல், ஓர் ஆலமரத்தடியில் தம் தோழர்களோடு புலிக்கோடு ஆடிக் கொண்டிருப்பார்; புலிக்கோடு மாறிச் சீட்டாட்டம் வந்தபோது, அவர் கையில்...

எங்கே போகிறோம்? – தவத்திரு குன்றக்குடி அடிகளார் 5

Image
அகரமுதல 224  தை 22 – 28, 2049, பிப் .4 - 10 , 2018 இலக்குவனார் திருவள்ளுவன்         04 பிப்பிரவரி 2018         கருத்திற்காக..   (எங்கே போகிறோம்? – தவத்திரு குன்றக்குடி அடிகளார் 4 தொடர்ச்சி) எங்கே போகிறோம்? – தவத்திரு குன்றக்குடி அடிகளார் 5 “ இலம் என்றசை இருப்பாரைக் காணின்  நி லம் என்னும் நல்லாள் நகும் ” என்றார் திருவள்ளுவர் இன்றைக்கு நிலமகள் நம்மைப் பார்த்து நாணிச் சிரிக்கின்றாள். நம்நாட்டில் எண்ணெய் இறக்குமதி, கோதுமை இறக்குமதி செய்கிறார்கள். இப்படி விளைகின்ற விளையுள் இருந்தும், உழைக்கின்ற கரங்கள் இருந்தும், ஏன் இந்த நிலை? எண்ணுங்கள்! நல்ல வளமான நாட்டை உருவாக்க நடந்திடுங்கள்! அந்த திசைநோக்கி தடக்க வேண்டும். நல்ல கால்நடைகளைப் பேணிவளர்ப்போம். ”வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்” என்று அன்று ஆண்டாள் நாச்சியார் பாடினார். இன்று குடம் நிறையக் கறக்கும் மாடுகளை நமது நாட்டில் பஞ்சாபில்தான் பார்க்க முடிகிறது அடுத்து குஜராத்தில்தான் பார்க்க முடிகிறது. நாடு முழுதும் அத்தகைய கால் நடைகள் வளர ...

வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 9

Image
அகரமுதல 223  தை 15 – 21, 2049, சனவரி 28- பிப் .3, 2018 இலக்குவனார் திருவள்ளுவன்         28 சனவரி 2018         கருத்திற்காக.. (வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் :  8 தொடர்ச்சி) வள்ளுவர் கண்ட இல்லறம் – 9 தகையணங்குறுத்தல்   தலைமகன் தலைவியைக் காணுங்கால் அவள் அழகால் உந்தப்பட்டு அதனால் உளம் வேறுபடுதல். அமைதியாக இருந்த ஆடவனின் உள்ளம் பெண்ணின் தோற்றத்தால் வருந்தத் தொடங்குதல். “தகை அணங்குறுத்தல்’  என்றால் “அழகு வருத்தத்தை அடைவித்தல்’  என்பதாகும். தலைவியைக் கண்ட தலைவன் கூறுகின்றான்:                  அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை       மாதர்கொல் மாலும்என் நெஞ்சு              (1081)        அணங்குகொல்=வருத்தும் அழகுத் தெய்வமோ?; ஆய்மயில் கொல்லோ= ஆராய்ந்தெடுக்கப்பட்ட அழகிய மயிலோ?; கனங்...

இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 12 – சி.இலக்குவனார்

Image
அகரமுதல 223  தை 15 – 21, 2049, சனவரி 28- பிப் .3, 2018 இலக்குவனார் திருவள்ளுவன்         28 சனவரி 2018         கருத்திற்காக.. ( இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)   11–   தொடர்ச்சி)   இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)   12 5.அரசு நாடு நல்லமைதிபெற்று மக்கள் இன்புற்று வாழ வேண்டுமானால் அந்நாட்டில் அரசமுறை சிறந்து விளங்க வேண்டும். நாட்டின் சிறப்பியல்பைக் கூற வந்த திருவள்ளுவர், “ ஆங்குஅமைவு எய்தியக் கண்ணும் பயன்இன்றே வேந்து அமைவு இல்லாத நாடு ” ( குறள். 740) என்று திருவாய் மலர்ந்தருளினார். “ நெல்லும் உயிரன்றே ;  நீரும் உயிரன்றே   மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்   அதனால் ,  யானுயிர் என்பதறிகை   வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே ” ( புறநானூறு  186) என்று  மோசிகீரனார்  மொழிந்தருளினார். ஆகவே, சங்கக் காலத்தில் நல்லரசின் இன்றியமையாமையை நாட்டு மக்கள் நன்கு அறிந்திருந்தனர் என்று நாம் தெளித...