விடுதலைப் பள்ளு 2017 – இ.பு.ஞானப்பிரகாசன்
அகரமுதல 199, ஆடி 28 , 2048 / ஆகத்து 13, 2017 விடுதலைப் பள்ளு 2017 – இ.பு.ஞானப்பிரகாசன் இலக்குவனார் திருவள்ளுவன் 13 ஆகத்து 2017 கருத்திற்காக.. விடுதலைப் பள்ளு 2017 [இராகம் – முகாரி; தாளம் – சோற்றுத்தாளம்] பல்லவி ஆடுவோமே! பள்ளுப் பாடுவோமே! அழகான விடுதலை அடைந்து விட்டோ மென்று ஆடுவோமே! உருவடி-௧ நல்லாரைத் தலைவரென்னும் காலமும் போச்சே! – வெற்று வீணரைக் கொண்டாடும் காலமும் ஆச்சே! – நல் நீதியே பெரிதென்ற காலமும் போச்சே! – சமய, சாதிக்கு வாக்களிக்கும் காலமும் ஆச்சே! ஆடுவோமே! பள்ளுப் பாடுவோமே! அழகான விடுதலை அடைந்து விட்டோ மென்று ஆடுவோமே! உருவடி-௨ எங்கும் பொதுவரி* என்பதே பேச்சு! – நாம் எல்லாரும் கிறுக்கரென்று உறுதியாச்சு! பாரத அன்னைக்குப்போற்றி # என்போமே! – நாம் பசுக்காக மனிதரையே போடுவோமே! ஆடுவோமே! பள்ளுப் பாடுவோமே ! அழகான விடுதலை அடைந்து விட்டோ மென்று ஆடுவோமே! உருவடி-௩ மீனவர் பிணம்எண்ணும் காலம் வந்ததே! – அணு மின்சா...