Posts

அவியினும் வாழினும் என்? – தமிழ்சிவா

Image
அகரமுதல 194, ஆனி 25 , 2048 / சூலை 09, 2017 இலக்குவனார் திருவள்ளுவன்      09 சூலை 2017       கருத்திற்காக.. அவியினும் வாழினும் என்? – தமிழ்சிவா வா சாதித் தேரிழித்து நடுத்தெருவில் நிறுத்து இல்லாதோர் இயலாதோர் வீடு வாசல் கொளுத்து ! எடு கசடுகளே தலைவனெனப் புகழ்ந்து விழா எடு ! விடு மானம் பழம் அறிவு புகழ் பீடோடு பிறவும் விடு! செய் பாழும் சிலைக்குப் பாலூற்றிப் பரவல் செய்! வாழும் தொண்டர்க்கு வரிசையுடன் பாடைசெய்! பெருமக்கள் காட்டிய நல்வழியைப் பெருவிருப்புடனே  நிரவல் செய்! தடு தமிழினத்தில் யாரேனும் தகுதியால் உயர்ந்தாலும் உள்ளுக்குள் நல்லறிவு தன்மானம் புகுந்தாலும் ஓடோடித்தடு! நடு பொதுத்தெருவில் சாதிப்பலகை ‘நச்சு’ என நடு! அழி காடு கழனி கடல் ஆறு மலை அன்னைமொழி உட்பட  அத்தனையும் மீண்டெழாதபடி அழி! செழி செல்வாக்கு பதவி சிவப்புப்பணம் யாவும் பெற்று போ புகழ்மணக்க அசிங்கத்தை அள்ளியள்ளிவீசு நீதான்  இழுக்கு உன்னைவிட  உயர்ந்தது என்னுடலில் திரண்ட  அழுக்கு! ச...

புள்ளிகளும் கோலங்களும் ! – மெல்பேன் செயராசர்

Image
அகரமுதல 193, ஆனி 18, 2048 / சூலை 02, 2017 இலக்குவனார் திருவள்ளுவன்      02 சூலை 2017       கருத்திற்காக.. புள்ளிகளும் கோலங்களும் ! வெள்ளை மனத்தினிலே கறுத்தப்புள்ளி வந்துவிட்டால் வினையாவும் குடிபுகுந்து விட்டதென   நாம்நினைப்போம் புள்ளியினால் கோலங்கள் மாறுவதைக் கண்டுவிட்டால் நல்லபுள்ளி வருவதற்கு நாம்முயன்று நிற்போம் ! புள்ளியினால் கோலங்கள் புறப்பட்டு வந்துநிற்கும் புள்ளியது பிழைத்துவிடின் அலங்கோலம் ஆகிவிடும் புள்ளியினை நாமென்றும் எள்ளிநகை யாடிவிடின் நல்லகோல மெல்லாமே நரகலோக மாகிவிடும் ! நல்லவராய் இருப்போரை நல்லபுள்ளி எனவழைப்போம் வல்லவராய் இருப்போரும் நல்லபுள்ளி ஆகிடுவார் சொல்லவல்ல விசயமெல்லாம் நல்லபுள்ளி பெற்றுவிடும் நல்லபுள்ளி நிறைந்துவிடின் நன்மையங்கே குவிந்துவிடும் ! எழுத்துக்குப் புள்ளிவைத்தால் மெய்யெழுத்தாய் மிளிர்ந்துவிடும் இழுக்குடைய செயல்செய்தால் மெய்மையங்கே அழிந்துவிடும் புள்ளிவைத்த மானைத்தான் யாவருமே விரும்பிடுவார் கள்ளநிறை நரியதனை காதலிப்பார் யாருமுண்டோ ! புள்ளியது இடம்மா...

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ்7/8 – கருமலைத்தமிழாழன்

Image
அகரமுதல 193, ஆனி 18, 2048 / சூலை 02, 2017 இலக்குவனார் திருவள்ளுவன்      02 சூலை 2017       கருத்திற்காக.. (பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 6/8 – தொடர்ச்சி) பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 7/8  சொற்பொழிவு    கேட்பதற்கும்   அறிஞ   ரோடு சொல்லாடல்   நிகழ்த்துதற்கும்   கவிஞர்   தம்மின் நற்கவிதை    அவர்சொல்லத்   துய்ப்ப   தற்கும் நாளிதழின்    செய்திகளை    அறிவ   தற்கும் பல்வேறு   விளையாட்டில்   திளைப்ப   தற்கும் பலநாட்டுப்   பொருட்களினை    வாங்கு   தற்கும் அற்புதமாய்   நமக்குவாய்த்த   இணையம்   இந்த அகிலத்தை   வீட்டிற்குள்   அடைத்த   தின்று ! அறிவியலுக்   கேற்றமொழி   அல்ல   வென்னும் அற...