பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 5/8 – கருமலைத்தமிழாழன்
அகரமுதல 191, ஆனி 04, 2048 / சூன் 18, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 18 சூன் 2017 கருத்திற்காக.. (பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 4/8 – தொடர்ச்சி) பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 5/8 பாலுக்குள் நெய்பதுங்கி உள்ள தன்மை பார்வைக்குத் தெரியவில்லை என்ப தாலே பாலுக்குள் உள்ளநெய்யும் பொய்யாய்ப் போமோ பாட்டிற்குள் அறிவியலின் கருத்தை யெல்லாம் மேலுக்குச் சொல்லவில்லை என்ப தாலே மேடையிலே இல்லையென்று முழங்க லாமா காலங்கள் வினைத்தொகையில் உள்ள போலே கனித்தமிழில் அறிவியலும் உள்ள துண்மை ! பொறியிலின் நுணுக்கத்தைப் பாட்டிற் குள்ளே போற்றியதைத் தெரியாமல் மறைத்து...