கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 13 & 14
அகரமுதல 174, மாசி 07, 2048 / பிப்பிரவரி 19, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 19 பிப்பிரவரி 2017 கருத்திற்காக.. (கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 11 & 12 தொடர்ச்சி) திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 13 & 14 பதின்மூன்றாம் பாசுரம் புலவரின் முதற்சொல்லும் தமிழ்த்தாயின் பாடலும் வெண்டளைச் சொற்களையே வெண்பாவிற் பூட்டுதலான் கொண்டமுதற் சீரே புலவோர்க் குரிமையதாம்! பண்டு புனைந்தோர் படைத்தார் முதற்சொல்லே; வண்டமிழ்த்தாய் யாத்து வடித்தாள்காண் பாடலெலாம் ! தண்டை யணிந்து தளிர்க்கொடியாள் ஆடுகிறாள் ; வண்டிசை மேவ மயங்கிடவே பாடுகிறாள் ; கண்திறப்பாய், கோதாய்! கடைதிறப்பாய் ;சொல்,முதற்சொல்; கொண்டேத்தும் பாடலொன்று தாய்தருவாள் எம்பாவாய் ! பதினான்காம் பாசுரம் தமிழ் கேளாமல் உயிர்வாழாமை நன்றுஇது நன்றல்ல என்றே உணர்த்துமொளி மன்றில் இலாதெனினும் நெஞ்சம் கலங்காதே ! ஒன்றிடும் நல்லிசைதான் உள்ளம் விழைவதுபோல் என்றும் ஒலியா திருந்தும் மனம்வருந்தா ! தின்னும் அறுசுவையில் ஒன்...