Posts

திருக்குறள் அறுசொல் உரை: 115. அலர் அறிவுறுத்தல் : வெ. அரங்கராசன்

Image
அகரமுதல 171, தை 16, 2048 / சனவரி 29, 2017 இலக்குவனார் திருவள்ளுவன்      29 சனவரி 2017       கருத்திற்காக.. (திருக்குறள் அறுசொல் உரை: 114. நாணுத் துறவு உரைத்தல் : தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை காமத்துப் பால் 14. களவு இயல் அலர் அறிவுறுத்தல்      தலைமக்களின் காதலை, ஊரார் அறிந்து பலவாறு பழிதூற்றல் (01-05 தலைவன் சொல்லியவை ) அலர்எழ, ஆர்உயிர் நிற்கும், அதனைப்       பலர்அறியார் பாக்கியத் தால்.         “பழிச்சொல்லால், உயிரும் நிற்கிறது; இதனை, ஊரார் அறியார்”. மலர்அன்ன கண்ணாள் அருமை அறியா(து),       அலர்எமக்(கு) ஈந்த(து)இவ் ஊர். “குவளைமலர்க் கண்ணாள் அருமை அறியாது, பழிதூற்றுவார் ஊரார்”. உறாஅதோ ஊர்அறிந்த கெளவை? அதனைப்       பெறாஅது, பெற்(று)அன்ன நீர்த்து. “ஊர்ப்பழி உண்மை ஆகாதோ? காதலைப் பெற்றால்போல் மகிழ்வேன்”. கவ்வையால், கவ்விது காமம்; அதுஇன்ற...

சல்லிகட்டுக்குத் தடையா? – ப.கண்ணன்சேகர்

Image
அகரமுதல 170, தை 09, 2048 / சனவரி 22, 2017 இலக்குவனார் திருவள்ளுவன்      22 சனவரி 2017       கருத்திற்காக.. சல்லிகட்டுக்குத் தடையா? சூரப்புலி பாய்ந்திடத் துரத்தினாள் முறத்தாலே சுவைத்தமிழ் இலக்கியம் வீரத்தை ஊட்டுமே! போரிடும் களத்திலே புறமுதுகைக் காட்டாத பெற்றமகன் வீரத்தைப் பெருமையெனக் காட்டுமே! வீரத்தமிழ் இனத்தினை விளையாட்டு பொம்மையென வேடிக்கை பார்த்திடும் வீணர்களின் கூட்டமே! ஓரவஞ்சச் செயலாலே ஒடுங்காது தமிழினம் வாக்களிக்கும் மக்களால் ஒடுங்கிடும் ஆட்டமே! ஏறுதழுவு விளையாட்டால் எங்களது வீரத்தை இவ்வுலகம் கண்டிட இரக்கமற்ற தடையேனோ? பேருபெற்ற தமிழரின் பாரம்பரிய விழாவினைக் கூறும்போடும் குரங்கெனக் கொள்கையே முறைதானோ? வேருவிட்ட ஆர்ப்பாட்டம் வீழ்த்திட நினைப்பது வீட்டுக்குள் அணுகுண்டு வைப்பதும் சரிதானோ! ஊருக்கு ஊரெலாம் உணர்வுகள் கொப்பளிக்க ஓரணியில் தமிழனின் உள்ளமும் புரியாதோ! இடைத்தரகு வணிகத்தால் இழிவான அரசியல் இந்தியா தாங்குமா இனிமேலும் அடிமையா? மடைதிறந்த வெள்ளமாய் மக்களின் போராட்டம் மண்ணினது பொருளெ...

கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை:பாசுரங்கள் 5& 6

Image
அகரமுதல 170, தை 09, 2048 / சனவரி 22, 2017 இலக்குவனார் திருவள்ளுவன்      22 சனவரி 2017       கருத்திற்காக.. திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 5& 6 ஐந்தாம் பாசுரம் தமிழ்மொழி மூலமறியா இறைபோல ! தானுணரா, பேசும் தமிழ்க்கூட்டம் தானுணரா வானுணரா, வையம் உணரா, தமிழவளை ஈன்றவர்தாம் யாரென்றும், என்றுயிர்த்தாள் என்றும், ஊன்றியா ராய்ந்தும் உணர்ந்தறியாத் தன்மையளாய்த், தோன்றறியா ஞானியாய்த் தோன்றும் இறையொப்ப, ஆன்ற பெருங்குழாத்திற் கன்னையளாய்ப், பன்மொழிகள் ஈன்றவளாய், நேரிலளாய், இன்பம் தருவாளின் கோன்மை இசைத்திடவா கோதையே, எம்பாவாய் ! ஆறாம் பாசுரம் தமிழின் பெருஞ்சிறப்பு ‘ ழ ‘ ழகரத் திருவெழுத்து ஏழிசைக்கு நேராய் ; நிகராய்ப் பிறமொழியில் நின்றிழைதல் காணார் ; மகரியெழில் முத்துக் குழையணிந்த மானே ! திகிரி மணிவிழி தெள்ளத் திறவாய் ! பகரும் எழுத்தின் கிழத்தியவள் செய்தாள், வகைவகையாய்ப் புகழ்நூல்கள்; ஊழி வருமுன் மகுடத் தமிழணங்கை முற்றோதி உய்ய நகைமுகளே ! நீராடி வாராயோ, எம்பாவாய் ! – கவிஞர் வேணு க...