Posts

காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 201-225: இலக்குவனார் திருவள்ளுவன்

Image
அகரமுதல 134, வைகாசி 0 2, 2047 மே 15, , 2016 இலக்குவனார் திருவள்ளுவன்      15 மே 2016       கருத்திற்காக.. (காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 176-200:  தொடர்ச்சி) காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 201-225 201. மறை முழங்கின; தழங்கின வண்தமிழ் வயிரின் – பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் :  233.1 புனையும் வண் தமிழ் மொழிந்து அடி பணிந்து போந்து அணைந்தார் – பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 235.3 செந்தமிழ் மாலையில் சிறப்பித்து ஏத்தினார். – பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் :  239.4 திறம் புரி நீர்மையில் பதிகச் செந்தமிழ் – பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் :  241.2 முத் தமிழ் விரகர் ஆம் முதல்வர் நண்ணினார் – பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள...

க.தமிழமல்லன் இயற்றிய அண்ணல் பாவியம் 3/5 – ஆறு.செல்வனின் ஆய்வுரை

Image
அகரமுதல 135, வைகாசி 0 9, 2047 மே 22 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன்      22 மே 2016       கருத்திற்காக.. (க.தமிழமல்லன் இயற்றிய அண்ணல் பாவியம் 2/5 தொடர்ச்சி) 3 க.தமிழமல்லன் இயற்றிய அண்ணல் பாவியம்:    மற்றோர் இடத்தில், காவலர்களை நையாண்டி செய்கின்றார் பாவலர். நாட்டில் நடக்கும் பெரும்பெரும் கொள்ளைகளையும், கொலைகளையும் அரசியல்வாதிகளுக்கு அடிவருடிக்கொண்டு கண்டுங் காணாமல் போகும் காவல்துறை, இரவு நேரத்தில் வேலை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பும்  ஏழைகளை ஐயப்பட்டு உசாவல் என்ற பெயரில் அழைத்துச் சென்று கடுமையாக அடித்துத் துன்புறுத்துவதையும் இரண்டு சக்கர வண்டிகளின் ஆய்வு என்ற பெயரால் தேவையற்ற கேள்விகள் கேட்டு வண்டி உரிமையாளர்களிடம் கையூட்டுபெற்றுக்கொண்டு அனுப்புவதையும் மனத்தில் கொண்டு இந்தப் பாடலை எழுதியிருக்கிறார் போலும். காவலர்கள் ஐயப்பட்டு மாறன், முல்லையைப் பிடித்துக்கொள்கிறார்கள். அவர்களின் பண்பை நையாண்டி செய்யும் பாவலர்: ‘ தப்பேதும் செய்யாரை இரவில் கண்டால்   தண்டிக்கா திருப்பதற...

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 9.மனத்தை யாளுதல்

Image
அகரமுதல 135, வைகாசி 0 9, 2047 மே 22 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன்      22 மே 2016       கருத்திற்காக.. (வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 8 தொடர்ச்சி) 9 9. மனத்தை யாளுதல் மனமுத் தொழில்செயு மாபெருஞ் சத்தி. ஆக்குதல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று செயல்களையும் செய்யவல்ல மிகப்பெரிய சக்தி மனம் ஆகும். நினைக்குந் தொழிலை நிதமுஞ் செய்வது. மனம் எப்பொழுதும் எண்ண அலைகளில் மூழ்கி இருக்கும் இயல்பினை உடையது. அறனு மறனு மறிதிற னிலாதது. மனம் புண்ணிய பாவங்களைப் பிரித்து அறியும் திறனற்றது. அதனெறி விடுப்பி னழிவுடன் கொணரும். மனத்தை அதன் வழியில் செல்லவிட்டால் உடனடியாக அழிவை ஏற்படுத்தும். அதனெறி விடாஅ தாளுத றங்கடன். மனத்தை அதன் வழியில் செல்லவிடாமல் அதனை ஆளுதல் நம் கடமை ஆகும். தானதிற் பிரிந்து சந்தத நிற்க. ஒருவன் தன் மனத்திலிருந்து எப்பொழுதும் பிரிந்து நிற்றல் வேண்டும். எதையது நினைத்ததோ வதையுடன் காண்க. மனம் எதை நினைக்கிறது என்பதை உடனடியாகக் கண்டறிய வேண்டும். மறமெனில் விலக்குக வறம...