செந்தோழர் நல்லகண்ணு வாழ்க! – புதுவைத் தமிழ்நெஞ்சன்
செந்தோழர் நல்லகண்ணு வாழ்க! – புதுவைத் தமிழ்நெஞ்சன் இலக்குவனார் திருவள்ளுவன் 27 திசம்பர் 2015 கருத்திற்காக.. தோழர் நல்லகண்ணு(மார்கழி 12, 1956 / திசம்பர் 26, 1925) செந்தோழர் நல்லகண்ணு நீடுவாழ்க! செங்கொடித் தோழர் நல்ல கண்ணு சிந்தனை ஆற்றல் உள்ளவராம் – அவர் செங்களம் ஆடிடச் சிறிதும் தயங்கார் செழுமை நெஞ்ச நல்லவராம். உழைக்கும் மக்கள் உள்ளம் எல்லாம் உணர்வில் கலந்த உழைப்பாளி – அவர் அழைத்தால் எதற்கும் அணிய மாவார் அவரே ஏழைப் பங்காளி. அரசியல் என்பதை ஆக்க முள்ள அறிவு வழிக்குச் சென்றவராம் – போர் முரசம் போல மூச்சும் பேச்சும் முயன்றே இங்கே அடிப்பவராம். நெடிய உருவம் நிமிர்ந்த பார்வை நேர்மை உள்ளம் கொண்டவராம் – தமிழ்க் குடியில் பிறந்து கொற்றம் ஆளும் தகுதி எல்லாம் பெற்றவராம். மக்கம் நலனே மனத்தில் என்றும் மதியோ டவரும் நினைத்திடுவார் – உழைக்கும் மக்கள் நெஞ்சின் துடிப்பாய் என்றும் துடிதுடித்தே வாழ்ந்திடுவார். நேர்மை வாய்மை தூய்மை ஏழ்மை அரசியல் வாழ்வில் கொண்டவராம் – ஆணி வேர்போல் வேர்வை க் குலத்தைக்...