Posts

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 7 – பேரா.சி.இலக்குவனார்

Image
இலக்குவனார் திருவள்ளுவன்      15 நவம்பர் 2015       கருத்திற்காக.. ( அகரமுதல 104 ஐப்பசி 22, 2046 / நவ. 08, 2015 தொடர்ச்சி )  எழிலரசி அல்லது காதலின் வெற்றி 7 மகிழ்ச்சி ததும்பும் மாநட் பினர்போல் வேடிக் கையுடன் வியப்புச் சொற்களும் கலந்துரை யாடியே காத்தவீ ரனுக்குப் பலியிடுங் கடாவைப் பொலிவுறச் செய்து இழுத்துச் செல்லு மேழை களிடை 6 துள்ளுங் கடாப்போல் தோற்றம் விளைத்து அடைந்தனர் முடிவில் யாருமில் காட்டை. அவருடை தங்கை யவனுடை மையலில் வீழ்க் காரணம் விளைத்த பிழைக்கு பழிகொள வெண்ணினர் விழிக ளழன்றன ஒருவரை யொருவ ருற்று நோக்கினர் கைகள் சென்று கைவாள் தொட்டன ஆடலனுடைய, கோட்டமில் தோற்றம், அவர்கள் கல்லுளம் அனலிடை யிட்ட மெழுகுபோ லாக்க, நழுவின கைகள்; மின்பொறி பட்டு மெலிவடைந் தவரென நடுங்கினர் வலிமை யொடுங்கி நின்றனர். முரணிய தோற்றம் முழுது முணர்ந்து அவர்கருத் தறியா தாடலன் தானும். ஏறு போனின் றிறும்பூ தெய்தினான். அவர்க ளுள்ளத் திலவனும் முன்னாள் எழிலர சிக்கோ ரின்ப முத்தம் தழுவி யளித்ததும்,...

கடவுள் மொழிபேசும் கடவுள் – இரா. சத்திக்கண்ணன்

Image
இலக்குவனார் திருவள்ளுவன்         22 நவம்பர் 2015         கருத்திற்காக.. கடவுள் மொழிபேசும் கடவுள் என் கவனம் விழ கிட்டே தத்தித்தத்தி ஓடிவந்து கடவுள் மொழியில் பேசுகிறது வா வாவென கைகள் நீட்டுகையில் வெட்கப்பட்டு கண்களையும் கன்னங்களையும் மூடிக்கொள்கிறது அவ்வப்போது முன்தலையையும் மறைத்துக்கொள்கிறது சற்று கை நகர்த்தி இருக்கேனா ? என்று அடிக்கடிப் பார்த்துக்கொள்கிறது நான் பார்க்காததுபோல் நடிக்கும்போது உற்றுப்பார்க்கிறது துளிசத்தம் எழாமல் கைகொட்டுகிறது நான் சட்டென்று பார்க்கையில் அம்மாவின் பின்னால் ஓடி ஒளிந்துகொள்கிறது நான் நகரும்போது கண்ணில் ஏக்கம் தெறிக்க வழியனுப்புகிறது கையசைத்து! கடவுள் மொழிபேசிய கடவுள்!! – இரா. சத்திக்கண்ணன் தரவு: முதுவை இதாயத்து ( அகரமுதல 106   கார்த்திகை 06, 2046 / நவ. 22, 2015)

எல்லாம் எமதாகும்! – உலோக நாதன்

Image
இலக்குவனார் திருவள்ளுவன்      26 நவம்பர் 2015       கருத்திற்காக.. எல்லாத்தமிழனும் ஒன்றே ஆகுவோம்! பல்லாண்டு காலமாய் ஆண்ட தமிழ் அடிமையாய்க் கிடப்பதா? சொல்லாண்டு தமிழினம் அடிபட்டுச் சாவதா? பொல்லாக்குணம் கொண்ட கொடியர்கள் எம் மண் ஆழ்வதா? மெல்லத் தமிழ் இனம் இனிச் சாகுமா? வெல்லாப் போர்களம் எங்கும் தமிழனுக்கு உண்டா? எல்லாத்தமிழனும் ஒன்றே ஆகுவோம் எள்ளாய் நினைத்தவன் எலும்பை நொறுக்குவோம் கொல்லாக் குணம் இன்னும் தேவையோ? எல்லாம் அழிந்த பின் நீ அழுவது நியாயமோ? செல்லாப் போர்களம் தோல்வியை நோக்கி ‘ செல் ‘லால் அடித்தாதல் உன் ஊர் நாசம்! கல்லாய் நீயும் இருப்பதோ..! கடவுளையும் துணைக்கழைப்பதோ! மெல்லத் திறந்திடு உந்தன் சிந்தனையை! பொல்லாப்பகை விரட்ட – புலிப் படையுடன் இணைந்திடு! நல்லார் உலகைப் படைக்க நாமும் இணைவோம் சொல்லார் எம் மீதொரு பழி எதிர் காலத்தார் எல்லாம் எமதாகும் எதிரியை அழித்திடத் திடம் கொண்டால்! உலோக நாதன் ( அகரமுதல 107    கார்த்திகை 10, 2046 / நவ. 26, 2015)

திருக்குறள் அறுசொல் உரை – 094. சூது : வெ. அரங்கராசன்

Image
இலக்குவனார் திருவள்ளுவன்      22 நவம்பர் 2015       கருத்திற்காக.. (அதிகாரம் 093. கள் உண்ணாமை தொடர்ச்சி) 02. பொருள் பால் 12. துன்ப இயல் அதிகாரம் 094. சூது பரம்பரைப் புகழ் , பண்பு , மதி , அன்பு பொருள்கெடுக்கும் சூதை விடு . வேண்டற்க, வென்(று)இடினும் சூதினை; வென்றதூஉம்,      தூண்டில்பொன் மீன்விழுங்கி அற்று.   மீன்விழுங்கிய தூண்டில் இரைதான்          சூதில் வருவெற்றி; வேண்டாம். ஒன்(று)எய்தி, நூ(று)இழக்கும் சூதர்க்கும், உண்டாம்கொல்      நன்(று)எய்தி, வாழ்வ(து)ஓர் ஆறு?  ஒன்றுபெற்றுப், பலஇழக்கும் சூதாடிக்கும்        நன்றுஆம் வாழ்வு உண்டாமோ?      உருள்ஆயம் ஓயாது கூறின், பொருள்ஆயம்,  போஒய்ப் புறமே படும்.  ஓயாது சூதினை ஆடினால்,        பொருள்வளம் போஒய்த் தொலையும். சிறுமை பலசெய்து, ச...