திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 030. வாய்மை
இலக்குவனார் திருவள்ளுவன் 23 August 2015 No Comment (அதிகாரம் 029. கள்ளாமை தொடர்ச்சி) 01.அறத்துப் பால் 03. துறவற இயல் அதிகாரம் 030. வாய்மை தீமை இல்லாதவற்றைச் சொல்லலும் , பொய்த்தல் இல்லாது வாழ்தலும் . வாய்மை எனப்படுவ(து) யா(து)?எனின், யா(து)ஒன்றும், தீமை இலாத சொலல். எச்சிறு அளவிலேனும், தீமை இல்லாதன சொல்லலே வாய்மை . பொய்ம்மையும் வாய்மை இடத்த, புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின். யார்க்கும் குற்றம்இலா நன்மையான பொய்யும், வாய்மையின் இடத்தது. தன்நெஞ்(சு) அறிவது, பொய்யற்க; பொய்த்தபின், தன்நெஞ்சே தன்னைச் சுடும். மனம்அறிந்து பொய்ப்பானை, அவனது ...