Posts

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 007. மக்கள் பேறு

Image
இலக்குவனார் திருவள்ளுவன்      26 July 2015       No Comment (அதிகாரம் 006. வாழ்க்கைத் துணை நலம் தொடர்ச்சி)   01. அறத்துப் பால்         02. இல்லற இயல்     அதிகாரம் 007. மக்கள் பேறு      ஒழுக்கமும், நல்அறிவும் நிறைந்த,      மக்களைப் பெறுதல் பெரும்பேறு. பெறும்அவற்றுள், யாம்அறிவ(து) இல்லை, அறி(வு)அறிந்த      மக்கள்பே(று), அல்ல பிற.      அறி[வு]அறிந்த மக்கள் பேறே,        பேறுகளுள் எல்லாம் பெரும்பேறு.      எழுபிறப்பும், தீயவை தீண்டா, பழிபிறங்காப்    பண்(பு)உடை மக்கள் பெறின்.        பழிதராப் பண்புப் பிள்ளைகளால்,        எப்பிறப்பிலும் தீமைகள் தீண்டா.  தம்பொருள் என்ப,தம் மக்கள்; அவர்பொருள்,   தம்தம் வினையான் ...

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 006. வாழ்க்கைத் துணை நலம்

Image
இலக்குவனார் திருவள்ளுவன்      26 July 2015       No Comment (அதிகாரம் 005. இல்வாழ்க்கை தொடர்ச்சி) 001 அறத்துப் பால்            002 இல்லற இயல் அதிகாரம்     006. வாழ்க்கைத் துணை நலம்      கணவர், மனைவியரது நல்பண்புகளும், இணைஇலாப் பெண்ணின் பெருமைகளும்.   மனைத்தக்க மாண்(பு)உடையள் ஆகித்,தன் கொண்டான்    வளத்தக்காள், வாழ்க்கைத் துணை.        மனைஅறத்தாள், கணவற்கு வளம்தரு        தகுதியள்; நலம்சார் துணை . மனைமாட்சி இல்லாள்கண் இல்ஆயின், வாழ்க்கை,      எனைமாட்சித்(து) ஆயினும் இல்.        இல்லப்பண்பு இல்லாளிடம் இல்எனின்,        மற்ற சிறப்புகளால் பயன்இல். இல்ல(து)என்? இல்லவள் மாண்(பு)ஆனால்; உள்ள(து)என்?    இல்லவள் ம...

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 005. இல்வாழ்க்கை

Image
இலக்குவனார் திருவள்ளுவன்      26 July 2015       No Comment (அதிகாரம் 004. அறன் வலியுறுத்தல் தொடர்ச்சி   001 அறத்துப் பால் 01 இல்லற இயல்       அதிகாரம்  005. இல்வாழ்க்கை    குடும்ப வாழ்க்கையின் கடமைகளும்,        அரும்பெரும் பொறுப்புக்களும், சிறப்புக்களும். இல்வாழ்வான் என்பான், இயல்(பு)உடைய மூவர்க்கும்,      நல்ஆற்றின் நின்ற துணை.        பெற்றார், மனைவி, மக்களுக்கு,        இல்வாழ்வான் நவவழித் துணைவன். துறந்தார்க்கும், துவ்வா தவர்க்கும், இறந்தார்க்கும்,      இல்வாழ்வான் என்பான் துணை.        துறவியார், வறியார், ஆதரவிலார்க்கு,        இல்வாழ்வான் நல்ல துணைவன். தென்புலத்தார், தெய்வம், விருந்(து),ஒக்கல், தான்,என்(று)ஆங்(கு),    ஐம்புலத்(து)ஆ(று) ஓம்ப...