Posts

திருவள்ளுவமாலையின் சொல்நுட்ப மேலாண்மைத்திறன்கள் – பகுதி 6 (நிறைவு)

Image
இலக்குவனார் திருவள்ளுவன்      18 சனவரி 2015       கருத்திற்காக.. திருவள்ளுவமாலையின் சொல்நுட்ப மேலாண்மைத்திறன்கள் – பகுதி 6 (நிறைவு) (மார்கழி 27, 2045 / சனவரி 11, 2015 தொடர்ச்சி) 10.5. இடைக்காடரது பாடற்கொடை – 54       கடுகைத் துளைத்[து]ஏழ் கடலைப் புகுத்திக்          குறுகத் தறித்த குறள்   பொருள் உரை      திருக்குறளின் சொற்சுருக்கத்தையும், பொருட்சுருக்கத்தையும் ஆய்ந்தால், கடுகின் நடுவே துளைபோட்டு, ஏழு கடல் நீரையும் அத் துளைவழி உட்செலுத்தி, அளவில் குறுகி இருக்கும்படித், தறித்து வைத்தது போன்ற வடிவினது திருக்குறள். நுட்பங்கள்       சொல் : கடுகு கடுகு = திருக்குறட் பா ஏழ்கடல் = அப் பாவில் உள்ள ஏழு சீர்கள் கடுகு மிகவும் சிறியது. திருக்குறளின் குறள் யாப்பும் அன்றைய இலக்கியச் சூழலில் மிகவும் சிறியது.  கடுகு சிறிதெனினும். அப் பருப்பொருளுக்குள் பல்வேறு ஆற்றல்களும் [சத்துக்களும...

மனங்கவர் ‘மாங்கனி’ தந்த கண்ணதாசன் : பகுதி 7 – இலக்குவனார் திருவள்ளுவன்

Image
மனங்கவர் ‘மாங்கனி’ தந்த கண்ணதாசன் : பகுதி 7  – இலக்குவனார் திருவள்ளுவன் இலக்குவனார் திருவள்ளுவன்      18 சனவரி 2015       கருத்திற்காக.. (மார்கழி 27, 2045 / சனவரி 11, 2015 தொடர்ச்சி)   அருகிய அயற்சொற்கள் அயல்மொழிச் சொற்களை மிகக் குறைவாகவே கையாண்டுள்ளார். அவ்வாறு அவை இடம் பெற்ற இடங்களிலும் நான்கு இடங்கள் தவிர, அனைத்து இடங்களிலும் கிரந்த எழுத்துகளை நீக்கித் தமிழ்வரிவடிவிலேயே குறிப்பிடுகிறார். செகத்தில் (மாங்கனி : 2. சேரன் அவையில் ..7:7) கோசமிட்டு (மாங்கனி :18. வென்றிகொள் சேரர்தான :1:4) சீவன் (மாங்கனி :38 சாகாத சித்திரங்கள் 9-1) .துட்டனும் (மாங்கனி :15 ஏடீ தலைவி:3.8) என்பன போன்று அயலெழுத்து நீக்கித் தமிழெழுத்து கொண்டு குறிக்கின்றார். அதிர்சுட்டக்காரி (மாங்கனி :15 ஏடீ தலைவி:3.4) பட்டாபிசேகம் (மாங்கனி :35. வஞ்சியிற் கொடியும் வஞ்சிக்கொடியும் 3:8) நாதசுவரத்துக்காரர் (மாங்கனி :35 வஞ்சியிற் கொடியும் வஞ்சிக்கொடியும் 5:9) சந்தோச (மாங்கனி :35 வஞ்சியிற் கொடியும் வஞ்சிக்கொடியும் 6:8) என வரும் அந்...

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 7 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

Image
பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 7  – ஆ.வெ.முல்லை நிலவழகன் இலக்குவனார் திருவள்ளுவன்      18 சனவரி 2015       கருத்திற்காக.. (மார்கழி 27, 2045 / சனவரி 11, 2015 தொடர்ச்சி) காட்சி – 7 அங்கம் :     அன்பரசன், கவிஞர் இடம்      :     குடில் முன்வாசல் நிலைமை  :     (நாடகக் காட்சி முடிந்ததோ! இல்லையோ                  ஓடுது! மனமோ அன்புக்கெங்கோ!) அன்ப :     நாடகக் கருத்தை அறியும் முன்பு ஓடுது என்மனம் ஒன்று கேட்க? சென்னைக்கு வந்த நோக்கமென்ன? என்பதே அந்தக் கேள்வி என்பேன்! கவி       :     வானத்திலே நாகரீகம் வட்டமிட்டுச் சுற்றுதென தேன்வழியப் பேசுகின்ற சிலர் எனக்குச் சொல்லிடவே நானுந்தான் வந்தேன் நாகரீகம் கண்டேன்! நானிலத்தின் தலைநகரா? நாணித்தலை குனிந்தேன்!...