தேனி மாவட்டம் – வரலாற்றுப்பார்வை : வைகை அனீசு
தேனி மாவட்டம் – வரலாற்றுப்பார்வை : வைகை அனீசு இலக்குவனார் திருவள்ளுவன் 21 செப்தம்பர் 2014 கருத்திற்காக.. தேனி மாவட்டத்தில் கற்புக்கரசி கண்ணகி கால் பதித்து நடந்து வந்த பகுதி கம்பம் பள்ளத்தாக்கு ஆகும். சேர மன்னன் எழுப்பிய மங்கள தேவி கண்ணகி கோயில், முல்லைப்பெரியாறு அணை கட்டிய பென்னிகுக்கு கால்பதித்த இடம், மாவீரர் கான்சாஃகிப்பு சாலை அமைத்த கம்பம் சாலை, கான்சாஃகிப்பு இறப்பிற்குப் பின்னர் பெரியகுளம் பகுதியில் அவரது ஒரு கால் அடக்கம் செய்யப்பட்ட நவாபு பள்ளிவாசல் எனப் பல உண்டு.(கான்சாஃகிப்பு உடல் எட்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டு எட்டு இடங்களில் அடக்கம் செய்யப்பட்டது.) சோழ மன்னர்கள், பாண்டிய மன்னர்கள், மதுரை சுல்தான்கள், நாயக்க மன்னர்கள், ஆர்க்காடு நவாபு, தடம் பதித்த பகுதியும் மாலிக்கபூர் கடைசியாகப் போரிட்டு வென்ற பகுதியும் கம்பம் பகுதியே. இவை தவிர வருசநாட்டு நிலக்கிழார் அரண்மனை, கோம்பை அரண்மனை, பெரியகுளம் அரண்மனை, எரசக்கநாயக்கனூர் அரண்மனை எனப் பல அரண்மனைகள் இன்றும் வரலாற்றோடு வரலாறாக உள்ளன. பல ப...