Posts

செஞ்சீனா சென்றுவந்தேன் 9 – பொறி.க.அருணபாரதி

Image
செஞ்சீனா சென்றுவந்தேன் 9 – பொறி.க.அருணபாரதி இலக்குவனார் திருவள்ளுவன்      17 ஆகத்து 2014       கருத்திற்காக.. (ஆடி 25 , 2045 /ஆகத்து 10, 2014 இதழின் தொடர்ச்சி)   8. கோலொச்சும் மனை வணிகமும் வாழ்விழந்த வேளாண்மையும் சோழிங்கநல்லூர் – சிறுஞ்சேரி – செம்மஞ்சேரி எனப் பல பகுதிகளில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் குவிந்துள்ள சென்னையில், எப்படி மனை வணிகத் தொழில் மிகப்பெரும் ஆதிக்கம் செலுத்துகிறதோ, அதே போலவே தகவல் தொழில்நுட்ப நகரங்கள் குவிந்துள்ள சியான் நகரில் மனை வணிகத் தொழிலே கொடிகட்டிப் பறக்கிறது. பெரும் பன்னாட்டு நிறுவனங்கள் நடத்துகின்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், அங்கொரு புதிய வகை சீன மக்களை உருவாக்கியிருக்கின்றன. உலகமய நுகர்வியம் வடித்தெடுக்கின்ற புதியவகை சீனர்கள் அவர்கள்! அம்மக்கள், சீன மக்களின் பரம்பரை உணவு வகைகளை உண்பதில்லை. கெண்டகி வறுத்தகோழியகம் (Kentucky Fried Chicken – KFC)அல்லது மக்டொனால்டு(McDonald) விரைவுஉணவகங்களில் சாப்பிடுகிறார்கள். சீனர்களின் பரம்பரை வீடுகளையும், பழக்க வழக்...

மாமூலனார் பாடல்கள் 30: சி.இலக்குவனார்

Image
மாமூலனார் பாடல்கள் 30: சி.இலக்குவனார் இலக்குவனார் திருவள்ளுவன்      10 ஆகத்து 2014       கருத்திற்காக.. (ஆடி 18, 2045 /ஆகத்து 03, 2014 இதழின் தொடர்ச்சி) ௩௰ “உடையும் என் உள்ளம்” - தலைவன் -சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்   எல்லா வகையிலும் மேம்பட்டு விளங்கிய தலைவனும் தலைவியும் தம்முள் காதலித்தனர். ஒருவர்கொருவர் வாழ்க்கைத் துணைவர்களாக இருப்பதற்கு உறுதிசெய்து கொண்டனர். பிரிந்து அவர் அவர் வீட்டிற்குச் சென்றனர். தலைவன் தலைவி நினைவோகவே இருந்தான்; தலைவி தலைவன் நினைவாகவே இருந்தாள். தலைவன் காதலியை அடைந்து காதல் உரையாடிக் களிப்பெய்தக் கருதினான். ஒரு பெண் – மணமாகாத பெண் அவ்வளவு எளிமையாகக் கிட்டக் கூடியவளா? அவளையடையவதற்கு வழிகளை நாடினான். முதலில் அவள் ஆருயிர்த் தோழியின் உதவியை பெறுதல் வேண்டுமென்று முடிவு செய்தான்; பல தோழிப்பெண்களுள் அவளையும் அறிந்துகொண்டாள். நெருங்கினான் அவளை அவளும் அவனைக் கண்டாள். தோழி: யார் ஐயா! தாங்கள். தலைவன்: நான்……….. தோழி: ‘நான்’ என்றால் தலைவன...

எங்கே நீ இருக்கின்றாய் அம்மா? – கவிஞர் சீனி நைனா முகம்மது

Image
எங்கே நீ இருக்கின்றாய் அம்மா? – கவிஞர் சீனி நைனா முகம்மது இலக்குவனார் திருவள்ளுவன்      10 ஆகத்து 2014       கருத்திற்காக.. அனைத்துயிர்க்கும் நேரில் வந்து கருணை செய்ய ஆண்டவனுக் கியலாத காரணத்தால் தனித்தனியே தாய் படைத்தான் என்று மக்கள் தாய்க்குலத்தைப் புகழ்ந்துரைக்கக் கேட்டேன், ஆனால் எனக்கு மட்டும் கருணைசெய்யக் குப்பைத் தொட்டி ஏற்றதென ஏன்விடுத்துப் போனாய் அம்மா? தனக்கெனவே வாழாத தாய்மை என்னைத் தண்டிக்க என்ன பிழை நான் புரிந்தேன்? அகரமுதல 39