Posts

எல்லாளன் ஆள்வார் – தமிழ் மகிழ்நன்

Image
எல்லாளன் ஆள்வார் – தமிழ் மகிழ்நன் இலக்குவனார் திருவள்ளுவன்      25 மே 2014       கருத்திற்காக.. சிங்களன்நீ தமிழன்நான் தீங்கெமக்குச் செய்தாய்! சிங்களமே உன்நாடு! நாடெமெக்கு ஈழம்! கங்குலென்றும் பகலென்றும் பாராது நின்று காட்டினிலும் களத்தினிலும் கடுந்துன்பம் வென்று பொங்கிவரும் காட்டாறு போல்புலிகள் வருவார்! புத்துயிரை ஊட்டியினி புதுயீழம் பெறுவார்! மங்கிடாத புகழுடைய தமிழீழ நாடு மாவீரர் படைத்திடுவார் நடுங்கியினி ஓடு! முள்ளி வாய்க்கால் போர்முனையில் முழுவெற்றி என்றே மூர்க்கன்நீ முதிர்ச்சியின்றி முழங்குகிறா யின்று! கள்ளரைப்போல் வல்லரசர் களமாட வென்றாய்! கதறிநீயும் அழுதலறித் தோற்றோடி வீழ்வாய்! வெள்ளம்போல் மாவீரர் விளைகின்ற மண்ணில் வீணன்நீ வெகுவிரைவில் வீழ்ந்தழிவாய் எண்ணு! துள்ளுகின்ற சிங்களனுன் துடுக்குயினி மாறும்! சுட்டெரிக்கும் தீயிலுந்தன் தேசமுற்றும் மாயும்! மாந்தவுரிமை மீறியெமை மாய்த்ததினைப் பார்த்த வையமினி உனைவதைக்க வருவதை நீ பார்ப்பாய்! கூந்தலினைப் பிடித்திழுத்துக் கொடுமை செய்த பேயே! கூர்வேல்கள் குத்துகை...

நாம் இரண்டல்ல ஒன்று – செந்தமிழினி பிரபாகரன்

Image
நாம் இரண்டல்ல ஒன்று – செந்தமிழினி பிரபாகரன் இலக்குவனார் திருவள்ளுவன்      25 மே 2014       கருத்திற்காக.. நாம் இரண்டல்ல ஒன்றெனச் சொல்லுங்கள். கடற்கோள்கள் பிரித்த தமிழாண்ட தேசங்கள்.. அடிமை தேசங்களாய்… அவனியில் இன்று.. ஆயினும் உணர்வழியா இனமாய்.. ஒன்றெனச் சொல்லுங்கள். உரத்துச் சொல்லுங்கள்.. எங்கள் இனம் இன்று ஒன்றானதென்று! இல்லை என பார்ப்பவர்கள் பகைவர்கள்! . பிரித்துப் பார்ப்பவர்கள் பித்தர்கள்…!! ஒன்றான மாந்தர் ஒன்றுபட்ட இனம்.. ஒற்றை தாய் மொழி.. கடல் பிரித்த தேசங்கள்.. இரண்டானாலும் தமிழினம் என்றும்… ஒரு குடி காண்! ஒற்றுமை ஒன்றே உயர்வெனக் கொண்ட வேற்றுமை இல்லா தமிழர் நாம்!.. ஒன்றே எம் இலக்கு. விடுதலை எம் கிழக்கு உரத்துச் சொல்வோம் உலகுக்கு!. கோடி சோடி விழிகளும் காணும் காட்சி ஒன்றெனச் சொல்! துண்டாக்கும் பகைகள் எலும்புத் துண்டிற்காய்.. சில குறைகள்… இனத்தை இரண்டாக்க குரைக்கின்ற இரண்டகர்கள்! இழிந்த மொழியில் இளித்துச் சொல்வார்.. நாம் இரண்டு என்றும்.. துண்டு த...

இடர்கள் தந்தபோதும்…எம் இலட்சியத் தாகம் தீராது – ஈழப்பிரியன்

Image
இடர்கள் தந்தபோதும்…எம் இலட்சியத் தாகம் தீராது – ஈழப்பிரியன் இலக்குவனார் திருவள்ளுவன்      18 மே 2014       கருத்திற்காக.. அன்று…., கோயில் மணி ஓசையிலும், குயில்களின் இன்னிசையிலும், மங்கள வாத்திய இசையிலும் , மலர்ந்திடும் எங்கள் காலை…., இன்று…, கூவி வரும் செல்(பீரங்கி) ஓசையிலும், பறை எழுப்பும் அவல வசையிலும் , ஐயோ …என்ற அலறலிலும், விடிகிறது எங்கள் காலை. யுத்தத்தின் வடுக்கள்…. அடுத்தவன் கை ஒன்றை எடுத்து தன் கையோ? என ஏங்கும் ஒருவன் அங்கே…! பிணமாய்க் கிடக்கும் ஒருவனுக்கு ……, அவன் குடலே மாலையாய் கழுத்தில் அங்கே…! தமிழன் அல்லவா…..? இறந்தும் அவன் பறவைகளுக்குத் தீனி தருகின்றான். பிணக்குவியல் அகற்ற அந்த ஊரில் நாதியில்லை…., நாய்களே நன்றிக்கடன் கழிப்பதாய் இறுதிக்கடன் செய்கின்றன. “இந்தா பிள்ள தேத்தண்ணி” என்ற தாயிடம்….., “வந்தேன் அம்மா…” என்று…, முற்றத்து மரக் கண்ணாடியில் தலை சீவச் சென்றவள்…, தலையை சீவிச் சென்றதாம் ஒரு பீரங்கி . அதே மரத்தில் தொங்குகிறது ,அவள் அணிந்த மேலங்கி. சிங்களவன் பீரங்கிகள் கூட …., வல...