Posts

Thirukkural திருக்குறள் 102

குறள் அமுதம்     காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது. (குறள்எண்:102) குறள் விளக்கம்      மு.வ : உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும். சாலமன் பாப்பையா : நமக்கு நெருக்கடியான நேரத்தில் ஒருவர் செய்த உதவி, அளவில் சிறியது என்றாலும், உதவிய நேரத்தை எண்ண அது இந்தப் பூமியை விட மிகப் பெரியதாகும்     English Version Thirukural » Aram :             A timely benefit, -though thing of little worth,,, The gift itself, -in excellence transcends the earth. ( Kural No : 102 )   Kural Explanation: A favour conferred in the time of need, though it be small (i...

இனிதே இலக்கியம் 1 எங்கும் கலந்துள்ள இறைவன்

இனிதே இலக்கியம் 1 எங்கும் கலந்துள்ள இறைவன் கண்ணில் கலந்தான் ; கருத்தில் கலந்தான்-என் எண்ணில் கலந்தே இருகின்றான் ;- பண்ணில் கலந்தான் ; என் பாட்டில் கலந்தான் -உயிரில் கலந்தான் கருணை கலந்து.   எல்லாச் சமயத்தவரும் ஏற்கும் வண்ணம் பொதுநோக்கான இறைநெறிப்பாடல்கள் தமிழில்தான மிகுதியாக உள்ளன. இப்பாடலும்   அனைவரும் பாடுவதற்குரிய பொதுநிலைச் சிறப்பு உடையது.   இறைவன் ,   அருட்பார்வை உடைய கண்ணில் கலந்திருக்கின்றான் ; நற்செயல்களுக்கு அடிப்படையான நல்ல கருத்துகளில் கலந்திருக்கின்றான் ;   பிறர் நலம் பேணக்கூடிய உயர்ந்த எண்ணத்தில் கலந்திருக்கின்றான் ; இசையாகிய பண்ணிலும் பாட்டிலும் கலந்திருக்கின்றான் ;   அருள்உணர்வுடன் நம் உயிரிலும் கலந்துள்ளான்.   எல்லா இடங்களிலும் கலந்து இணைந்துள்ள இறைவனை வள்ளலார் இவ்வாறு வாழ்த்துகிறார்.     எனவே , நமக்கு அருள் பார்வையும் நற்செயலும் உயர் எண்ணமும் நல்லிசையும் தேவை என்பதை   வள்ளலார் உணர்த்துகின்றார்.     திருவருட்பிரகாச வள்ளலார் என அழைக்கப்பெறும் இராமலிங்க அடிகள...

Thirukkural திருக்குறள் 1087

தகையணங்குறுத்தல்     திருக்குறள் - Thirukkural   கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர் படாஅ முலைமேல் துகில். - (குறள் : 1087) மாதருடைய சாயாத கொங்கைகளின்மேல் அணிந்த ஆடை, மதம் பிடித்த ஆண்யானையின்மேல் இட்ட முகபடாம் போன்றது.

Thirukkural திருக்குறள் 434

Image
திருக்குறள் குற்றமே காக்க பொருளாக குற்றமே அற்றம் தரூஉம் பகை  குற்றம்தான் ஒருவனுக்கு அழிவைத் தரும் பகை. குற்றம் இல்லாமல் காத்துக்கொள்ள வேண்டும்.  திருக்குறள் (எண்: 434) அதிகாரம்: குற்றம் கடிதல்  

Chinnasamy by Prof.Dr.S.Ilakkuvanar -செந்தீயில் மூழ்கிய தீந்தமிழ் மறவன்

Image

திருக்குறள் Thirukkural 127

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. - குறள்: 127 , அதிகாரம் : அடக்கம் உடைமை , கிளை : இல்லறவியல் , பிரிவு : அறம் . ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும். இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகி விடும். - கலைஞர் மு. கருணாநிதி

Thirukkural திருக்குறள் 1300

குறள் அமுதம்     தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய நெஞ்சம் தமரல் வழி. (குறள்எண்:1300) குறள் விளக்கம் மு.வ : ஒருவர்க்கு தாம் உரிமையாகப் பெற்ற நெஞ்சமே உறவாகாதபோது அயலார் உறவில்லாதவராக இருப்பது எளிதேயாகும். சாலமன் பாப்பையா : நமக்குரிய நெஞ்சமே நம்முடன் உறவாக இல்லாத போது, மற்றவர் உறவில்லாதவராக இருத்தல் என்பது எளிதேயாகும்.       English Version Thirukural » Kamam :             A trifle is unfriendliness by aliens shown, When our own heart itself is not our own! ( Kural No : 1300 )   Kural Explanation: It is hardly possible for strangers to behave like relations, when one’s own soul acts like a stranger.