Posts

Bharathidasan poem about Bharathy : பாரதியார் நாமம் வாழ்க!

Image
பாரதியார் நாமம் வாழ்க! வாளேந்து மன்னர்களும் மானியங்கொள்   புலவர்களும் மகிழ்வாய் அந்நாள் தாளேந்திக்காத்த நறுந் தமிழ் மொழியைத்   தாய்மொழியை உயிரை இந்த நாள் ஏந்திக் காக்குநர் யார்? நண்ணுநர் யார்?   என அயலார் நகைக்கும் போதில் தோளேந்திக் காத்த எழிற் சுப்ரமணிய   பாரதியார் நாமம் வாழ்க! ...

Ilakkuvanarin pataippumanikal 98: Tamilnadu is the birth place of humanbeing: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 98 உலகில் முதல் மாந்தர் தோன்றிய இடம் தமிழகமே

இலக்குவனாரின் படைப்பு மணிகள்  98 உலகில் முதல் மாந்தர் தோன்றிய இடம் தமிழகமே பதிவு செய்த நாள் : 29/11/2011  உலகில் முதல் மாந்தர் தோன்றிய இடம் தமிழகமே என்பதும், முதல் மாந்தரால் உரையாடப்பெற்ற மொழி தமிழே என்பதும் உண்மையோடுபட்ட செய்திகளே யாயினும் இன்னும் யாவராலும் ஒப்புக்கொள்ளப்படவில்லை. தமிழர்கள் இந்நாட்டில் தோன்றியவரே என்பதும் ஆரியர் வருகைக்கு முன்னர் இந்நாட்டில் வாழ்ந்த மக்கள் தமிழர்களே என்பதும் நிலைநாட்டப்பெற்றுவிட்டன. (பழந்தமிழ் பக்கம் 42) 0 முந்தைய பதிவு » தமிழ்த்தாத்தா பேராசான் உ.வே.சா ~ அறிவோம் அறிஞர்களை! http://www.natpu.in/?p=18498

Ilakkuvanarin pataippumanikal 97: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 97. “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்பது வெற்றுரையன்று

இலக்குவனாரின் படைப்பு மணிகள்  97. “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்பது வெற்றுரையன்று . இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : 25/11/2011  உலக மொழிகளை எல்லாம் கற்று ஆராய வல்ல வாய்ப்பு ஏற்படுமேல் தமிழ் ஒன்றே உலக முதன் மொழியாம் பெருமைக்கும் தகுதிக்கும் உரியது என்று நிலைநாட்ட இயலும். “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்பது வெற்றுரையன்று. ஓரிடத்தில் தோன்றிய மாந்தர் பல்வேறு இடங்கட்கும் பிரிந்து சென்று பல வகையாலும் வேறுபட்டு விளங்குகின்றனர். மாந்தர் முதலில் தோன்றிய இடம் தென்னகமே என்று மாந்தர் நூல், வரலாற்று நூல், நில நூல் ஆராய்ச்சியாளர்கள் கூறத் தொடங்கியுள்ளனர். இக் கூற்று வலுப்பெற்று நிலை நாட்டப்படுமேல், தமிழே உலக மொழிகளின் தாய் என்று யாவராலும் ஒப்புக் கொள்ளப்படும். தமிழே சிதைந்து ஒன்று பலவாய் வேறுபட்டனவாய் இன்று காணப்பட்டாலும் தமிழின் இயல்புகள் ஆங்காங்குள்ள மொழிகளில் வெளிப்படுகின்றன. யானை கண்ட குருடர்கள் போன்று இன்று மொழி நூலறிஞர்கள் தமிழையும் அதன் கிளை மொழிகளையும் பல்வேறு குடும்பங்கட்கு உரிமையாக்கி உரைத்து மகிழ்...

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 96. நாகரிக மக்கள் கற்க வேண்டிய மொழி

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 96. நாகரிக மக்கள் கற்க வேண்டிய மொழி இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : 24/11/2011  நாகரிக மக்கள் கற்க வேண்டிய மொழிகளுள் ஒன்று தமிழ் என்பதை யாரும் மறத்தல் இயலாது. உலக அரங்கில் இடம் பெறுவதற்கு முன்னர் அதன் பிறப்பிடமாம் இந்நாட்டில் அதற்குரிய இடத்தை அளித்தல் வேண்டும். பாரத கூட்டரசுச் செயல்முறை மொழிகளுள் ஒன்றாகத் தமிழை ஏற்கச் செய்தல் வேண்டும். பாரத மொழிகளின் தாயே தமிழ்தான். தாயைப் புறக்கணித்து, மகளைப் போற்றும் மதியிழந்த மாந்தரைப்போல் இன்று தமிழைப் புறக்கணித்து இந்தியை அரியணையில் ஏற்ற முயல்கின்றனர். பழந்தமிழுடன் ஆரியம் வந்து கலந்ததனால் உண்டான விளைவே பாரத மொழிகளின் தோற்றம். ஆனால் பாரத மொழிகளின் தாய் ஆரியமே; தமிழும் அதன் புதல்விகளுள் ஒன்றே என்று கருதிவிட்டனர். வடவாரியம், இந்தோ ஐரோப்பிய குடும்பத்தைச் சேர்ந்தது. பழந்தமிழோ தனிக்குடும்பத்தைச் சார்ந்தது. மொழிக்குடும்பங்களை ஆராயின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனித்தனி இயல்புகள் உள என்பதை அறியலாகும். (பழந்தமிழ்  பக்கம் 35) 0 ...

Ilakkuvanarin pataippumanikal 95: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 95. தமிழ், தொன்மையும் வளமும் உடையது.

இலக்குவனாரின் படைப்பு மணிகள்  95. தமிழ், தொன்மையும் வளமும் உடையது. இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : 23/11/2011  தமிழ், தொன்மையும் வளமும் உடையது. ஆங்கிலமே தோன்றப் பெறாத காலத்தில் அஃது உயர் தனிச் செம்மொழியாக விளங்கியது. ஆங்கிலேயரைப் போன்று தமிழர்களும் திரைகடல் ஓடியும் செல்வம் ஈட்டினர்; கடல் கடந்தும் நாடுகளை வென்றனர். ஆனால் ஆங்கிலேயரைப் போன்று தம் மொழியைப் பிறர்மீது சுமத்தவில்லை. சென்றனர்; வென்றனர்; திரும்பினர். தமிழரும் ஆங்கிலேயர் வழியை-பிறரை அடிமைப் படுத்தும் வழியை மேற்கொண்டிருப்பின் இன்று தமிழும் உலகப் பொது மொழியாக ஆகும் தகுதியைப் பெற்றிருக்கும். (பழந்தமிழ்  பக்கம் 35) 0 முந்தைய பதிவு » http://www.natpu.in/?p=18112

Ilakkuvanarin pataippumanikal 94: we ignore thamizh: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 94 ஆங்கிலத்தையே போற்றி வந்தோம்.

இலக்குவனாரின் படைப்பு மணிகள்  94 தமிழர்களாகிய நாம் நம் தாய் மொழியாம் தமிழைப் புறக்கணித்து  ஆங்கிலத்தையே போற்றி வந்தோம். http://www.natpu.in/?p=18110  இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : 22/11/2011  தமிழர்களாகிய நாம் நம் தாய் மொழியாம் தமிழைப் புறக்கணித்து ஆங்கிலத்தையே போற்றி வந்தோம். ஆங்கிலத்தைப் போற்ற வேண்டியது நமது முன்னேற்றங் கருதியேதான் என்பதில் கருத்து வேறுபாட்டுக்கு இடம் இல்லை. ஆனால் அதற்காகத் தமிழை அறவே மறந்துவிடுதல் கூடாது அன்றோ. நமக்கொரு பணிப்பெண் வேண்டிய நிலைமையை நினைத்து நமது வீட்டுத் தலைவியைப் புறக்கணித்து விடலாமா? தமிழர்களில் சிலர் அவ்வாறே செய்யும் நிலையில் இருக்கின்றனர். ஆங்கிலம் தமிழுக்கடுத்துக் கற்க வேண்டிய மொழியேயன்றித் தமிழை விடுத்துக் கற்பதற்குரியதன்று. ஒவ்வொரு தமிழரும் தமிழை முதன் மொழியாகவும் ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகவும் கற்றல் வேண்டும். கல்வி நிலையங்களில் அவ்வாறு கற்பதற்குரிய வசதிகளைச் செய்தல் வேண்டும். (பழந்தமிழ்  பக்கம் 34-35) முந்தைய பதிவு » வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது

Ilakkuvanarin pataippu manikal 93: Tahmizh family languages is correct: திராவிட மொழிகள் எனக் கூறற்க! தமிழ்க் குடும்ப மொழிகள் என்க!

இலக்குவனாரின் படைப்பு மணிகள்  93. உலகில் ஈராயிரத்து எழுநூற்றுத் தொண்ணூற்றாறு (2796) வேறுபட்ட மொழிகள் உளவாம். இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : 21/11/2011  இலக்குவனாரின் படைப்பு மணிகள் 93 உலகில் ஈராயிரத்து எழுநூற்றுத் தொண்ணூற்றாறு (2796) வேறுபட்ட மொழிகள் உளவாம். இவற்றை எல்லாம் சில குடும்பங்களாகப் பிரித்துள்ளனர். அவை இந்தோ – ஐரோப்பியன், செமிதிக்கு, சீனம், மலேயா, பொலீசியன், சிதியன் எனப்படும். சிதியன் குடும்பத்தில் திராவிட மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆயினும் திராவிட மொழிகள் என்று கூறப்படுவனவற்றைத் தமிழ்க் குடும்பம் என்று பெயரிட்டுத் தனிக் குடும்பமாகக் கருதுவதே ஏற்புடையதாகும். (பழந்தமிழ்  பக்கம் 30) http://www.natpu.in/?p=18108