Posts

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 64. ஒப்புமை தானே என்று எதற்கும் எதனையும் கூறிவிடுதல் கூடாது

இலக்குவனாரின் படைப்பு மணிகள்  64. ஒப்புமை தானே என்று எதற்கும் எதனையும் கூறிவிடுதல் கூடாது . இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : 29/09/2011  உவமை கூறுங்கால் இரண்டுக்கும் (உவமைக்கும் பொருளுக்கும்) உள்ள பொதுப் பண்பை எடுத்துக் கூறியும் உவமிக்கலாம் ; எடுத்துக் கூறாதும் உவமிக்கலாம்.  பவளம் போன்ற சிவந்த வாய் என்று கூறும்போது பவளத்திற்கும் வாய்க்கும் உள்ள பொதுப்பண்பாம் சிவப்பு நிறம் எடுத்துக் கூறப்படுகின்றது.  அவ்வாறு இன்றி பவளவாய் என்றும் கூறலாம்.  ஒப்புமை என்ன என்பதை உய்த்துணர்ந்து கொள்ளலாம்.  இது சுட்டிக்கூறா உவமம் எனப்படும்.  உவமை கூறுங்கால் உலகத்தார் உள்ளங்கொண்டு மகிழுமாறு கூறுதல்வேண்டும். ஒப்புமை தானே என்று எதற்கும் எதனையும் கூறிவிடுதல் கூடாது.  மயில் தோகை போலும் கூந்தல் என்பது தான் பொருந்துமேயன்றி காக்கைச் சிறகன்ன கரு மயிர் என்பது பொருந்தாது.  ஒற்றுமைக்குப் பாலும் நீரும்போல் என்பதுதான் பொருந்துமேயன்றி காஃபியும் டிக்காசனும் என்பது பொருந்தாது.  இருளன்ன கருங்கூந்தல் என்பது ப...

thamizhk katamaikal 99 : தமிழ்க்கடமைகள் 99. தமிழுக்கு என்னைத் தருவேன்

தமிழ்க்கடமைகள் 99. தமிழுக்கு என்னைத் தருவேன் இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : 29/09/2011  சுற்றி வளைந்திடும் எத்துயரத்தையும் சுட்டு முடித்து அதை எறிவனே சொத்து நலத்தினை முற்ற இழப்பினும் சொற்றமிழுக்கு என்னைத் தருவேனே - கவியரசு முடியரசனார் http://www.natpu.in/?p=16144

Ilakkuvanarin pataippumanikal 68 : இலக்குவனாரின் படைப்பு மணிகள் 68. மெய்ப்பாட்டியல் ஆராய்ச்சி வேறு எம்மொழிகளிலும் இல்லை

இலக்குவனாரின் படைப்பு மணிகள்  68. மெய்ப்பாட்டியல் ஆராய்ச்சி வேறு எம்மொழிகளிலும் இல்லை இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : 28/09/2011  இலக்கிய மாந்தர்கள் உள்ள உணர்ச்சியால் உந்தப்படுகின்றகாலை எவ்வாறு சொல்லோவியப் படுத்துதல் வேண்டும் என்பதற்கு மெய்ப்பாட்டியல் மிகவும் துணைபுரியும்.  இவ்வகையான ஆராய்ச்சி வேறு எம்மொழிகளிலும் இல்லை என்றே கூறலாம்.  வடமொழியில் நடனம் பற்றிய மெய்ப்பாடுகள் கூறப்பட்டுள்ளன.  அவையும் தமிழ் நூல்களைப் பின்பற்றியனவேயாம்.  இலக்கியப் படைப்புக்கும் இலக்கிய ஆராய்ச்சிக்கும் உரியனவாகக் கூறப்பட்டுள்ள மெய்ப்பாடுகள் பற்றிய இவ்வியல் முழுதும் கிடைக்கப் பெற்றிலதோ என்று ஐயுற வேண்டியுள்ளது.  ஒவ்வொரு இயலிலும் சொல்ல எடுத்துக்கொண்ட பொருளைப் பற்றிய விளக்கம் கூறிய பின்னர், வகை கூறத் தொடங்குவது ஆசிரியர் தனிச் சிறப்பு. இவ்வியலில் அவ்வாறு கூறப்பட்ட நூற்பா காணப்பெறவில்லை.  கரையானுக்கு இரையாகி விட்டது போலும். (தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 240) http://www.natpu.in/?p=16063

Ilakkuvanarin pataippumanikal 67 : இலக்குவனாரின் படைப்பு மணிகள் 67. மெய்ப்பாட்டாராய்ச்சி இயற்றிமிழ் இலக்கியங்களோடு தொடர்புடையதே

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 67. மெய்ப்பாட்டாராய்ச்சி இயற்றிமிழ் இலக்கியங்களோடு தொடர்புடையதே இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : 27/09/2011  “மெய்ப்பாடு என்பது பொருட்பாடு ; அஃதாவது உலகத்தார் உள்ள நிகழ்ச்சி ஆண்டு நிகழ்ந்தவாறே புறத்தார்க்குப் புலப்படுவதோராற்றான் வெளிப்படுதல்.”  இவ்வாறு பேராசிரியர் கூறியுள்ளார்.  உள்ளத்தில் தோன்றும் உணர்ச்சிக்கேற்ப உடலில் தோன்றும் வேறுபாடு என்பது தான் “மெய்ப்பாடு” என்பதன் பொருள்.  புளியை உண்டால் உள்ளத்தில் தோன்றும் உணர்ச்சிக்கேற்ப முகம் சுளிக்கின்றது.  எதிர்பாராத விதமாக அருகில் அரவம்   இருக்கக் கண்டால் அஞ்சுகின்றோம்.  அவ் வச்சத்தால் ஏற்படும் உணர்ச்சிக்கேற்ப உடல் நடுங்குகின்றது.  இலக்கியத்தைப் படிக்கும்போதும் இலக்கியத்தின் இயல்புக் கேற்ப நம் உள்ளத்தில் உணர்ச்சி உண்டாகின்றது.  அவ்வுணர்ச்சிக்கேற்ப நம் முகத்தில் வேறுபாடுகள் தோன்றுகின்றன.  கவிச்சுவையும் இலக்கியச் சுவையும் நம் உள்ளத்தில் உணர்ச்சியைத் தோற்றுவிக்கின்றன.  இயல், இசை, நாடகம் எ...

thamizhk katamaikal 98: தமிழ்க்கடமைகள் 98. தமிழ்ப் புகழை யாராலும் விளக்க இயலாது

தமிழ்க்கடமைகள்  98. தமிழ்ப் புகழை யாராலும் விளக்க இயலாது இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : 28/09/2011  வானார்ந்த பொதியின்மிசை வளர்கின்ற மதியே மன்னிய மூவேந்தர்கள் தம் மடி வளர்ந்த மகளே தேனார்ந்த தீஞ்சுவைசால் திருமாலின் குன்றம் தென்குமரி ஆயிடைநற் செங்கோல் கொள்செல்வி கானார்ந்த தேனே கற்கண்டே நற்கனியே கண்ணே கண்மணியே அக்கட்புலஞ்சேர் தேவி ஆனாத நூற்கடலை அளித்தருளும் அமிழ்தே அம்மே நின் சீர் முழுதும் அறைதல் யார்க்கெளிதே - கரந்தைக் கவியரசு இரா.வேங்கடாசலம் (பிள்ளை) http://www.natpu.in/?p=16067

Thamizhk katamaikal 97: தமிழ்க்கடமைகள் 97. தமிழறியா தெய்வமும் உண்டோ?

தமிழ்க்கடமைகள்  97. தமிழறியா தெய்வமும் உண்டோ? இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : 27/09/2011  தமிழ்ச்சுவை யறியாத் தெய்வம் உளதெனில் அஃதுணர் அலகையில் தாழ்வெனல் அறமே - வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் : அறுவகை இலக்கணம்: 672 http://www.natpu.in/?p=16006

Ilakkuvanarin pataippumanikal 66: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 66. முக்காலத்துக்குரியனவும் கூறினர்

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 66. முக்காலத்துக்குரியனவும் கூறினர் இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : 26/09/2011  ‘செவியறி வுறூஉ’ ‘வாயுறை வாழ்த்து’ என்பன புலவர்கள் பிறரைத் திருத்துவதற்காகப்பாடுவனவே. மேனாட்டில் அரசியலறிஞர்கள் பலர் – உரூசோ, காரல் மார்க்சு, பெயின், மெக்காலே போன்றவர்கள் – அவர்தம் காலத்து அரசைத் திருத்துவதற்காக எழுதப்பட்ட கட்டுரைகள், நூல்கள், இன்று பேரிலக்கியங்களாய்த் திகழ்கின்றன.  அவ்வாறே, தமிழ் நாட்டிலும் அரசைத் திருத்த – நல்வழிப்படுத்த – செங்கோலாட்சி புரியக் கூறிய கருத்து நிறைந்த பாடல்கள் பேரிலக்கியப் பகுப்பினுள் அடங்குவனவாய் உள்ளன.  புலவர்கள் பொருள் கருதிப் புகழ்ந்து பொய்வாழ்வு நடாத்தினர் என்று கருதுதல் கொடிது.  இடித்துரைத்து மக்களுக்கு ஏமம் நாடும் காவலர்களாய் இலங்கினர்.  அவர்கள் பாடல்கள் இலக்கண ஆசிரியர்களால் துறைகள் வகுக்கப் பெற்றுப் பின்வரும் புலவர்கட்கு முன் மாதிரியாய்த் திகழும் நிலை பெற்றன.  அவ்வாறு தோன்றிய இலக்கியங்களைக் கொண்டுதானே ஆசிரியர் தொல்காப்பியர் திணையும் துறையும...