Posts

New Thamizh Anthem: புதிய தமிழ் வாழ்த்துப்பாடல்.

மலேசிய எழுத்தாளர் சங்கம் ஜனவரி 23ம் தேதி வெளியிட்டுள்ள                             புதிய தமிழ் வாழ்த்துப்பாடல். http://voiceofthf.blogspot.com/2011/01/blog-post_27.html பாட்டைக் கேட்டருள்வீர்! ----------------------- நிலைபெறநீ வாழியவே! ஆக்கம்: கவிஞர் சீனி நைனா முகம்மது இசை: ஆர்.பி.எஸ்.ராஜூ குரல்: துருவன், பாபு லோகநாதன் காப்பியனை ஈன்றவளே!      காப்பியங்கள் கண்டவளே!    கலைவளர்த்த தமிழகத்தின்      தலைநிலத்தில் ஆள்பவளே! தாய்ப்புலமை யாற்புவியில்      தனிப்பெருமை கொண்டவளே!   தமிழரொடு புலம்பெயர்ந்து      தரணியெங்கும் வாழ்பவளே! எங்களெழில் மலைசியத்தில்         சிங்கைதனில் ஈழமண்ணில்    இலக்கியமாய் வழக்கியலாய்         இனக்காவல் தருபவளே! பொங்கிவளர் அறிவியலின்         புத்தாக்கம் அத்தனைக்கும...

Eezham pote neelaavanan: ஈழத்துத் தமிழ்க் கவிதைக்குப் பெருமை சேர்த்த நீலாவணன்

Image
ஈழத்துத் தமிழ்க் கவிதைக்குப் பெருமை சேர்த்த நீலாவணன் நினைவு நாள் இன்று January 11th, 2011 வரலாற்றுப்பதிவுகள் கவிஞர் நீலாவணனின் வாழ்க்கைக் குறிப்புகள் கவிஞர் நீலாவணன் 31- 06- 1931ல் பெரிய நீலாவணையில் பிறந்தார். சித்தாயுள் வேத வைத்தியர் திரு. கேசகப்பிள்ளை, திருமதி. கே. தங்கம்மா ஆகியோரின் சிரேஷ்ட புதல்வன் இவர். பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியராகப் பல வருடங்கள் நற்சேவை புரிந்த இவர், தனது பிறந்த ஊர் மீது கொண்ட பற்றின் காரணமாகவே ‘நீலாவணன்’ என்னும் புனைபெயரை வரித்துக் கொண்டு கால்நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக எழுதி வந்தார். இவர் இயற்கை எய்தும் வரை முழுமூச்சோடு ஆக்க இலக்கியத்துக்கு – குறிப்பாக ஈழத்துத் தமிழ்க் கவிதைக்குப் பெருமை சேர்த்துள்ளார். இவர் 1948ல் இருந்து எழுதத் தொடங்கினார். சிறுகதை மூலம் எழுத்துலகில் பிரவேசித்து கவிதையும் சிறுகதையும் எழுதிக் கொண்டிருந்தார். அப்போது சுதந்திரன் ஆசிரியராக இருந்த திரு. எஸ். டி. சிவநாயகம் இதனைக் கண்ணுற்று “நீங்கள் நூற்றுக் கணக்கானவர்களுள் ஒருவராக இருப்பதிலும் பார்க்க, நாலைந்து பேர்களுள் ஒருவராகப் பிரகாசிக்...

Ilakkuvanar centenary poems: இலக்குவனார் நூற்றாண்டு விழா கவியரங்கக் கவிதைகள்

Image
இலக்குவனார் நூற்றாண்டு விழா கவியரங்கக் கவிதைகள் இளவரசு அமிழ்தன்           “தொல்காப்பியமும் திருக்குறளின் படி நடந்தார் இலக்குவனார் இறுதிவரை தமிழ் மூச்சென்று வாழ்ந்தார்” கவிஞர் குமாரசாமி  : இலக்குவ னார்தமிழ் மேகம் – இவர் எந்தமிழ் மழையாலே தீர்த்தார் தாகம் இலக்(கு)கியவர் பெயரிலும் உண்டு – தமிழ் எங்குமே ஒளிவீச இசைத்தவர் அன்று தமிழாலே வாழ்ந்தவர் பல்லோர் – இவர் தமிழோடு வாழவே சிறைசென்ற நல்லார் ! தமிழையே அகமாக்கிக் கொண்டார் – இன்பத் தமிழன்றி இவர்வேறு சுகமென்ன கண்டார்?      கவிஞர் வி.செ. கந்தசாமி  : எம்மொழி செம்மொழி ஏற்றமிகு மொழி என்றெமக் குணர்த்தியவர் அம்மொழி தன்னை இகழ்ந்த தருக்கரை அழித்திட ஆர்த்தவராம் காப்போமென மொழி என்றேயுரைத்துக் களம்பல கண்டவராம் மீட்போம் இழந்த புகழை என்றே மேன்மை கொண்டவராம் ஒல்காப் புகழ்தொல் காப்பியத் திற்கே உரையும் கண்டவராம் தொல்லுல கெல்லாம் அந்நூல் பரவிடத் தொகுத்தனர் ஆங்கிலத்தில் இது மரபுக் கவிதை வரிசையில் அசையை இசையோடு பாடினார் என மறைமலையனார் பாராட்டினார். கவிஞர...
Image
இந்த வாரம் கலாரசிகன் First Published : 31 Oct 2010 03:37:41 AM IST Last Updated : கடந்த நூற்றாண்டில் தமிழுக்கு அளப்பறிய பங்களிப்பு நல்கியோரில் முதல்வர் யார் என்று யாராவது என்னைக் கேட்டால், கிஞ்சித்தும் தயக்கமின்றி நான் பகரும் பெயர், "தமிழ்த் தென்றல்' திரு.வி.க. என்பதாகத்தான் இருக்கும். அவரது இதழியல் பங்களிப்பு ஒருபுறம் இருக்க, ஆன்மிகம், அரசியல், இலக்கியம் என்று எல்லா தளங்களிலும் பங்களிப்பு நிகழ்த்திய மகான் "மயிலை முனிவர்'. மேடைப்பேச்சுக்கு இலக்கணம் வகுத்த பெருமையும் திரு.வி.க.வையே சாரும்.  "முருகன் அல்லது அழகு' என்றொரு புத்தகம். காரைக்குடியிலிருந்து வெளிவந்த "குமரன்' என்கிற மாத இதழின் முதல் இதழில் திரு.வி.க. "முருகன்' என்க...

முரண்சுவை-40: பாட்டுக் கோட்டை!

Image
முரண்சுவை-40: பாட்டுக் கோட்டை! ராஜேஷ் First Published : 31 Oct 2010 12:00:00 AM IST Last Updated : 1959ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8-ஆம் தேதி கல்யாண சுந்தரம் இறந்துவிட்டார் என்று தந்தி வந்தது. அப்பொழுது நான் என்னுடைய அத்தையின் வீட்டில் தங்கி படித்துக் கொண்டிருந்தேன். என்னுடைய அத்தையின் கணவரான அணைக்காடு டேவிஸ் என்பவர்தான் (அந்தக் காலத்தில் திராவிடர் கழகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தார்)  கல்யாண சுந்தரத்தைப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தியவர். எனவே அவரது பெயருக்கு தந்தி வந்தது. "கல்யாணப் பரிசு' படம் பார்த்துவிட்டு அந்தப் படத்தின் பாடல்களைக் கேட்டு ரசித்துக் கொண்டிருந்த எனக்கு அந்தச் செய்தி ஓர் அதிர்ச்சியைத் தந்தது. தத்துவப் பாடலானாலும் தாலாட்டுப் பாடலானாலும் இயற்கையைப் பாடினாலும் காதல...
Image
பிறவிக் கவிஞர்களுள் ஒருவர் கம்பதாசன் First Published : 26 Sep 2010 12:29:00 AM IST Last Updated : கவிஞர் கம்பதாசனின் பெயரை இந்தத் தலைமுறையினர் அதிகம் அறிய வாய்ப்பில்லை. இன்று அவர் இருந்திருந்தால் இன்னும் ஆறு ஆண்டுகளில் நூற்றாண்டு விழா கண்டிருப்பார். ""காளிதாசன் (சம்ஸ்கிருத மொழிக்கவிஞர்-காளிதாசன் பாரதியாரின் புனைபெயர்), பாரதிதாசன் (சுப்புரத்தினம்), சுரதா (சுப்புரத்தின தாசன்), கம்பதாசன் இவர்கள் நம்நாட்டு முதல்தர கவிஞர்கள். இவர்கள் பிறவிக் கவிஞர்கள்'' என்று பாரதிதாசன் வரிசையில் கம்பதாசனையும் இணைத்து மூத்த எழுத்தாளர் வ.ரா., புகழ் மகுடம் சூட்டி மகிழ்ந்தது ஒன்றே போதும்.""கம்பதாசன் எழுதும் நூல்கள் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கின்றன. அவை அவராலேயே இய...
"பாரதி பித்தர்' தொ.மு.சி. ரகுநாதன் கலைமாமணி விக்கிரமன் First Published : 02 Oct 2010 11:04:00 PM IST Last Updated : தொ.மு.சி. ரகுநாதன்' - எழுத்தும் பெயரும் அறியாதவர்கள் மிகக் குறைவே.1941-ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போரின் தாக்கம், அடிமைப்பட்டிருந்த பாரதம் முழுவதும் எதிரொலித்தது. ரகுநாதன் போன்ற இளம் ரத்தம் ஓடுபவர்கள் துடித்தெழுந்தார்கள். அவர் துடிப்புக்கு வழிகாட்டியாக, திருநெல்வேலியில் முத்தையா தொண்டைமான் என்ற தேசியவாதி, அந்நியர் ஆட்சியை அகற்றும் விடுதலைப் போராட்டங்களில் இளைஞர்களை ஈடுபடச் செய்தார்.ரகுநாதன், திருநெல்வேலி மாவட்டத்தில், 1923-ஆம் ஆண்டு அக்டோபர் 20-ஆம் தேதி முத்தையா தொண்டைமான் - முத்தம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். பள்ளிப் படிப்புக் காலத்...