Skip to main content

அகரப் பாடல் – சந்தர் சுப்பிரமணியன்




அகரப் பாடல்


அறிவைத் தீட்டு
ஆணவம் ஓட்டு
இறையைப் போற்று
ஈகை ஆற்று
உறவோடு இணை
ஊக்கம் துணை
எளிமை நாடு
ஏழைமை கேடு
ஐந்தின் பயன்காண்
ஒன்றிப் பிழை
ஓயாது உழை
ஔவெனப் பழகு
அஃதுடற்கு அழகு

 – இலக்கியவேள் சந்தர் சுப்பிரமணியன்
புன்னகைப் பூக்கள் :  பக்கம் 32

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! - பெருஞ்சித்திரனார்