துறைமங்கலம் சிவப்பிரகாசர் அருளியது கைம்மாறு உகவாமல் கற்றறிந்தோர் மெய்வருந்தித்தம்மால் இயலுதவி தாம்செய்வர் - அம்மாமுளைக்கும் எயிறு முதிர்சுவை நாவிற்குவிளைக்கும் வலியனதாம் மென்று. (பாடல்-27)முளைக்கும் பற்கள் தம்முடன் இருக்கும் நாவிற்கு கடினமான தின்பண்டங்களாயினும், மென்று கொடுத்து மிக்க சுவையைத் தரும். அதுபோல, கற்றறிந்த சான்றோர் பிரதிபலனை எதிர்பாராமல் உடலை வருந்தச் செய்து, தம்மால் இயன்ற உதவியைப் பிறருக்குச் செய்வார்கள்.
தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! - பெருஞ்சித்திரனார்
இலக்குவனார் திருவள்ளுவன் 28 திசம்பர் 2014 கருத்திற்காக.. வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன்! தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்! தனியேனாய் நின்றாலும் என்கொள்கை மாறேன்! சூழ்ந்தாலும் தமிழ்ச்சுற்றம் சூழ்ந்துரிமை கேட்பேன்; சூழ்ச்சியினால் பிரித்தென்றன் உடலையிருகூறாய்ப்போழ்ந்தாலும் சிதைத்தாலும் முடிவந்த முடிவே! புதைத்தாலும் எரித்தாலும் அணுக்களெல்லா மதுவே! -பாவலரேறு பெருஞ்சித்திரனார் அகரமுதல 59
Comments
Post a Comment