Posts

Showing posts from February, 2026

திருத்துறைக்கிழார் கட்டுரைகள் : ௩. திராவிட நாடும் தேர்தலும்

Image
ஃஃஃ     இலக்குவனார் திருவள்ளுவன்         23 February 2026         அ கரமுதல (உ. இந்த அடிமை வாழ்வு தேவைதானா? எண்ணிப் பார் தமிழகமே! – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்    ௩.  திராவிட நாடும் தேர்தலும்   சென்னை எசு.ஏ.ஏ. திடலில் நடந்த தமிழ் நாட்டுச் சட்டமன்ற (தி.மு.க.) க.து. கட்சி உறுப்பினர்கட்கு அளித்த பாராட்டுக் கூட்டத்தில் திரு.  அண்ணாதுரை  அவர்கள்,  “ திராவிட நாட்டுக் கொள்கையை நாங்கள் விடமாட்டோம்.   அதனைச் சட்டமன்றிலும், நாடாளுமன்றிலும் தம்பிகள் வலியுறுத்தத் தயங்கமாட்டார்கள்.  முப்பத்து நான்கு இலட்சம் மக்கள் திராவிட நாட்டுக் கொள்கையை ஆதரித்தே எங்கட்கு வாக்குகளை வழங்கியுள்ளனர்” என்று அழுத்தம் திருத்தமாகப் பேசியுள்ளார். உண்மையா? தேர்தல் நடைபெறு முன்னர் தேர்தலுக்காக நடத்திய கூட்டங்களில் திரு. அண்ணாதுரை யோ அவர் தம்பிகளோ திராவிட நாட்டுக் கொள்கையை வலியுறுத்தி மக்கள் முன் வைத்து அதை அடைய எங்களுக்கு வாக்களியுங்கள் என்று எந்தக் கூட்டத்திலும் பேசியதாகத் தெரியவில்லை....

உ. இந்த அடிமை வாழ்வு தேவைதானா? எண்ணிப்பார் தமிழகமே! – திருத்துறைக் கிழார்

Image
  ஃஃஃ       இலக்குவனார் திருவள்ளுவன்         16 February 2026         அ கரமுதல ( க. தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள்   – தொடர்ச்சி ) தமிழ்நாடு உ. இந்த அடிமை வாழ்வு தேவைதானா? எண்ணிப் பார் தமிழகமே! தமிழ்நாட்டுச் சட்டப்பேரவை, அமைச்சரவை பெயரளவில்தாம். தமிழ்நாட்டிற்குகந்த சட்டங்கள் தொகுத்து நடைமுறைப்படுத்தும் அதிகாரம் இல்லையே! இந்திய தரப்பு, பாரத நடுவணரசுக்கு அனுப்பி தலைவர் ஒப்புதல் பெற்ற பின்னரே நடைமுறைப்படுத்தலாம். தமிழக அரசு இந்திய அரசின் போக்குக்கு மாறாகச் செயல்பட்டால், உடனே கலைக்கப்படும். இப்படித்தான் நான்கு முறை தமிழ்நாட்டரசு கலைக்கப்பட்டது. தமிழக அரசு தில்லி அரசின் ஆணைக்குப் புறம்பாகச் செயல்படுகிறதா? என்று கண்காணிக்க  நடுவணரசு  ஓர் ஆளுநரை அமர்த்தியுளதறிக. தமிழ்நாட்டில் வருவாய் மிகுதியாக வரும் அஞ்சல்துறை, இருப்பூர்தித் துறை, சுங்கத்துறை, வருவாய்த் துறை, வாழ்நாள் காப்பீட்டுத் துறை, வைப்பகத் துறை முதலியன இந்திய நடுவணரசின் ஆளுமைக்குள்பட்டவை. இவற்றில் தமிழ் மொழிக்கு இடமில்லை. இந்திக்கு முதலிட...

3 ] தமிழ்நாடு , க. தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள்

Image
  ஃஃஃ       இலக்குவனார் திருவள்ளுவன்         09 February 2026         அ கரமுதல     (க௯.இளந்தமிழ்த் தலைமுறையே, என்ன செய்யப்    போகிறாய்? – தொடர்ச்சி) தமிழ்நாடு க. தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் தமிழ்நாடு மூவேந்தர்களால் ஆளப்பட்ட காலத்தில் இற்றை நாள்போல் அரசியல் கட்சிகளோ சமூகச் சீர்திருத்க் கட்சிகளோ இருந்ததாகச் சான்றுகள் எவையும் இலலை. ஏனெனில்,  அன்று அரசர்கள் மக்கள் நலனே தங்கள் நலன் எனக் கருதிய காலம்.  மக்களும் ‘ மன்னன் உயிர்த்தே மலர்தலையுலகம் ’ எனக் கருதி வாழ்நதனர். சங்க காலத்திற்குப் பிறகு ஆண்ட அரசர்கள் ஆட்சிப் பொறுப்பைப் பொருட்படுத்தாமையால் அமைச்சர்களே சிலர் முற்பட்டு ஆட்சியைக் கைப்பற்றி ஆளத்தொடங்கினர். அப்போதுதான் மக்களிடையே அரசப் பற்றின்மை தோன்றி அமைச்சர்கள்பால் கருத்தைச் செலுத்தலாயினர். ஆட்சி சரியில்லாத காரணத்தால் நாட்டில் ‘வற்கடம்’ உண்டாயிற்று. மக்கள் ஆறலைத்தல் முதலிய தீய செயல்களில் ஈடபடலாயினர். சிறுசிறு கூட்டத்தினராகச் சேர்ந்து கொண்டனர். வள்ளுவர் வாழ்ந்த காலத்தில...