கஎ. ஈழத்தைப் பாரடா! ஏமாளித்தமிழா!-திருத்துறைக் கிழார்
ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 25 December 2025 அ னரமுதல (க௬. தமிழர் செய்ய வேண்டுவன?- தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் கஎ. ஈழத்தைப் பாரடா! ஏமாளித்தமிழா! இலங்கையின் மக்கள் தொகை நூற்று எழுபது இலக்கம். அதில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை இருபது இலக்கம். சிங்களர் அரசு 1980 – ஆம் ஆண்டு தமிழின அழிப்புப் பணியில் இறங்கி, பல்லாயிரம் தமிழர்களைக் கொன்று குவித்தது. ஆண், பெண், சிறார் என்ற வேறுபாடு கருதாது நூழிலாட்டு நடத்தியது. ஈழத்தில் தங்கட்கு விடுதலை வேண்டிப் போராடிய தமிழர் நான்கு பிரிவினராவர். அவர்களுள் விடுதலைப்புலிகள் தீவிரமாகச் செயல்பட்டனர். இக்குழுவினர்க்குத் தலைவர் மறவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்பவர். தன்மானமுள்ள தமிழ் இளைஞர், ஆண், பெண் இருபாலரையும் திரட்டி விடுதலைப் புலிகள் படை உருவாக்கி, தமிழ் ஈழம் தனியாட்சி பெறப் போராடத் தொடங்கினார். தமிழ்மக்கள் பல்லாயிரவர் சிறீலங்காப் படைகளால் கொல்லப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்டனர். எனினும் தளராத...