ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 22 – சாதகக் கட்டுக்கதைகளும் தென்இந்தியாவும் – புலவர் கா.கோவிந்தன்
ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 28 March 2025 அ ்கரமுதல (ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 21 : வருணங்கள் – தொடர்ச்சி) ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு சாதகக் கட்டுக்கதைகளும் தென் இந்தியாவும் பிற்காலத்தில் கெளதம புத்திரராக உயர்ந்துவிட்ட போதிசத்தரின் எண்ணற்ற பிறப்புகள் குறித்த கட்டுக்கதைகளின் தொகுப்பாகிய சாதகக் கட்டுக்கதைகள் என்ற நூல் வட இந்தியரிடையே, ஐந்தாம் நூற்றாண்டிலும் அதற்கு முந்திய நூற்றாண்டுகளிலும் வழக்கில் இருந்த, தருமவிரோத பௌத்த வழிபாட்டு நெறியின் நாட்டுப்புறக் கட்டுக்கதைகளின் ஆவணம் ஆகும். இக்கதைகள், கி.மு. நான்காம் நூற்றாண்டு அளவில் எழுதப்பட்டன. ஆனால், அவை புத்தர் காலத்திற்கு நெடுங்காலத்திற்கு முன்பிருந்தே, நாட்டுப்புறக் கட்டுக்கதைகளாக இருந்திருக்க வேண்டும். அக்கதைகளில் ஒரு சில, வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான போக்குவரத்து, அக்காலத்திற்கு முன்னரும் பின்னரும் போலவே, நெருக்கமாக இருந்தது என்பதை உணர்த்துகின்றன. அக்கதைகள், தம் இனத்தைத் தாமே ...