கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 84 : சண்டிலி வருகை
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 84 : சண்டிலி வருகை ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 30 January 2025 அ கரமுதல ( கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 83 : 18. இசைப்பணி புரிந்த காதை-தொடர்ச்சி) பூங்கொடி இசைப்பணி புரிந்த காதை சண்டிலி வருகை மணக்கும் தென்றல் மாமலை எழிலும், கோடை தவிர்க்கும் குளிர்மலைப் பொழிலும், நீடுயர் தண்ண்ணிய நீல மலையுடன் கண்டுளங் குளிர்ந்த காரிகை ஒருத்தி சண்டிலி என்பாள் சார்ந்து வணங்கித் 55 `தமிழிசை வளர்க்கும் தையாஅல் நின்னுழை அமிழ்தம் நிகர்க்கும் அவ்விசை பயிலும் ஆர்வங் கொண்டுளேன் ஆதலின் அருள்நலங் கூர்விழி யாய்நின் குழுவினுள் எனையும் ...