௬. கலைச்சொற்களின் தேவை-புலவர் வி.பொ.பழனிவேலனார்
௬. கலைச்சொற்களின் தேவை-புலவர் வி.பொ.பழனிவேலனார் இலக்குவனார் திருவள்ளுவன் 18 January 2025 அகரமுதல ( ரு. தமிழ் வளர்ச்சிக்கு அரசு செய்யவேண்டியன-புலவர் வி.பொ.பழனிவேலனார்-தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் ௬. கலைச்சொற்களின் தேவை வேற்றுமொழிச் சொற்கள் பல தமிழில் வந்து கலந்து தமிழைக் களங்கப்படுத்துகின்றன. ஏன்? தமிழை அழிக்கின்றன என்றாலும் மிகையன்று. சில தமிழ் எழுத்தாளர் தமிழில் கலைச்சொற்கள் இல்லையென்று கூறி வேற்றுமொழிச் சொற்களைத் தம் படைப்புகளில் அப்படியே எடுத்தாள்கின்றனர். சில புதுமை எழுத்தாளர் மக்களுக்குப் புரியும்படி மக்கள் மொழியில் எழுதவேண்டுமென்று சொல்லி கொச்சைத் தமிழில் எழுதுகின்றனர். இத்தகையோரெல்லாம் தமிழை அழிப்பவர் என்பது எம் கருத்து. மணிப்பவளநடை , பேச்சுத்தமிழ்நடை , கொச்சைநடை ஆகியன தமிழை வளர்ப்பதற்கன்று. செந்தமிழ் நடையே சிறந்தது. அதுவே தமிழ்வளர்ச்சிக்கு உதவுவது. இன்றைய புதுமை எழுத்தாளர் பலர் , தம் மனம் போனப...