கல்பெயர்த்து இழிதரும் – (உ)ருத்ரா பரமசிவன்

கல்பெயர்த்து இழிதரும் – (உ)ருத்ரா பரமசிவன்


 sun01
கல் பெயர்த்து இழிதரும்
இமிழ் இசை அருவி
புல்லோடு ஆங்கு பழனம் தழீஇ
பச்சை படர்த்தி பகலவன் தீவிழி
அவிப்பக் குளிரும் நீர் விரி பரவை
நெடுநல் நாட!அஃது மன் அன்று
உள் ஊறு தண்புயல் கண்புயல் படர‌
அடுதுயர் தந்தனை வெஞ்சுரம் ஏகி.ruthra_paadal_kal_kanioviyam
நீர்ச்சுனை தீச்சுனை போலும் நிழலும் வேகும்
அழல்நுரை அள்ளி அன்னமும் கலங்கும்.
ஐய நின் துழந்த பிரிவின் கொல் துயர்
பொய்த்தீ பற்றி பொல்லாங்கு செய்யும்.
மைபொதி வானும் புள்நிரல் பொலிவும்
இடி உமிழ்பு கண்டு நடுக்குறு செய்யும்.
துடி அன்ன அதிர்வில் புல்லிய தும்பி
வலைச்சிறைக் கண்ணும் அழியச்சிதையும்.
முற்றிய கழையைப் பற்றி நெரிக்கும்
தூம்பின் நீள் கை நெம்பு தரும் வேழம்.
யானும் முறிபடும் உயிர் நரல் கேட்டிலை.

elephant01
நாஞ்சில் கவ்விய கொழுஞ்சினை கயல்படும்
துடிப்பும் அறியலை உயிர் நூல் கோத்து
உலுக்கிச் செகுக்கும் ஊசியோடு அழியும்
ஆவியும் கண்டிலை ஆர்கலி மாவொடு
தழுவினையாக ஆற்றொடு போகி
ஐந்தும் மறந்தனை எத்திணையாயினும்
அத்திணை ஈண்டு அருகுமின் விரைமின்
நெடுவேல் அன்ன மாவின் தளிராய்
அளியேன் மாதோ விதிர் விதிர்ப்புற்றே
ruthra-paramasivan02



Comments


  1. சிறந்த கருத்துப் பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue