தந்தை பெரியார் சிந்தனைகள்- 2. முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 11 மே 2019 கருத்திற்காக.. (தந்தை பெரியார் சிந்தனைகள் 1 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் – 2 (2) நான் நெருக்கமாகப் பழகினவரையில் என் அறிமுகம் இது: கல்லூரியில் படித்த காலத்தில் (1934-39) அவருடைய சொற்பொழிவைக் கேட்டேன் [குறிப்பு 2] ; குடியரசு, விடுதலை இதழ்களில் வந்த அவருடைய கட்டுரைகளைப் படித்து அநுபவித்தேன் ; நேரில் பேசினது இல்லை. துறையூரில் என் முயற்சியால் தொடங்கப்பெற்ற உயர்நிலைப் பள்ளியில் முதல் தலைமையாசிரியராக இருந்த காலத்தில் அவரிடம் நெருங்கிப் பழகினேன் [குறிப்பு 3] . தேவாங்கர் தெருமக்கள் எல்லாம் சுயமரியாதை ச் கட்சியினர்; அவர்களில் முக்கியமானவர் அரங்கசாமி(செட்டியார்) ; அவர் வீட்டில்தான் ஐயா அவர்கள் தங்குவதுண்டு. ஆண்டிற்கு ஆறு, ஏழு முறை ஐயா அவர்கள் கட்சி வேலையாகவும், திருமணம் முதலியவை நடத்தவும் வருவதுண்டு. பள்ளி தொடர்பாகவும், சொந்த வேலையாகவும், பல்வேறு உதவிகளையும் ஆலோசனைகளையும் ஐயா அவர்களிடம் பெற்றதுண்டு...