Posts

Showing posts from March, 2013

மகாவித்துவானின் மனம் வருடிய பாடல்

Image
மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் By புலவர் ப.சோமசுந்தர வேலாயுதம் First Published : 31 March 2013 01:25 AM IST   மகாவித்துவான்' மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் பாடம் கேட்க, திருநெல்வேலிக்கு அருகிலுள்ள ஓர் ஊரிலிருந்து "ஆரியங்காவல்' எனும் மாணவர் வந்தார். வந்திருக்கும் மாணவர் தகுதியறிந்து பாடம் கற்பிக்கும் இயல்பினராதலால், ஒரு செய்யுள் சொல்லுமாறு மகாவித்துவான் மாணவரிடம் வினவினார். "நீர்நாடு நீங்கியுமே நீங்காது தனைத்தொடரும்' எனும் தொடக்கத்தையுடைய பாடலை மாணவர் சொல்ல, அதைக் கேட்கும்போதே ஆசிரியரின் செவியும் உள்ளமும் குளிர்ந்தது. "இச்செய்யுள் எந்த நூலில் உள்ளது?' என அவர் வினவ, "திரிகூடராசப்பக் கவிராயர் எழுதிய குற்றாலத் தலபுராணத்தில் உள்ளது' என ஆரியங்காவல் கூறினார். பிறகு, ஆசிரியருக்கு அந்நூலையும் வரவழைத்துக் கொடுத்தார். ஆரியங்காவலுக்கு இயல்பாகச் செய்யுள் இயற்றும் ஆற்றலும் இருந்தது. வெளியூரிலிருந்து வந்திருப்பவர் என்பதாலும், தமிழில் நல்ல பயிற்சியுடையவராக இருப்பதாலும் ஆசிரியருக்கு இவர்பால் மிக்க அன்பு உண்டாயிற்று. ஒரு

எண்ணும் எழுத்தும் எண்ணப்படா எழுத்தும்!

Image
எண்ணும் எழுத்தும் எண்ணப்படா எழுத்தும்! By முனைவர் அ. சிவபெருமான் First Published : 31 March 2013 01:27 AM IST புகைப்படங்கள்  அடிகளிலோ சீர்களிலோ எழுத்தை எண்ணும்பொழுது உயிரில்லாத ஒற்றெழுத்தையும் ஆய்தவெழுத்தையும் எண்ணக்கூடாது என்பார் தொல்காப்பியர். இதனை, செய்யுளியலில், ""உயிரில் எழுத்தும் எண்ணப்படாஅ உயிர்திறம் இயக்கம் இன்மையான'' (தொல்.செய்.43) என்று கூறியுள்ளார். ஏன் எண்ணக்கூடாது என்பதற்கு, அவை உயிர்போல் இயங்காமையால்' என்பார். இவ்விடத்தில் தமிழறிஞர் அடிகளாசிரியர் கூறியுள்ள செய்தி அறியத்தக்கதாகும். "உயிரில்லெழுத்தும் என்றதிலுள்ள எச்ச உம்மையால் குறுகிய உயிர்த்தாகிய குற்றியலிகரமும், குற்றியலுகரமும் எண்ணப்படா வென்று கொள்க. எனவே, எண்ணப்படுவன உயிர் உயிர்மெய்யுமாகி இரு மாத்திரையிற் குறையாதன என்று கொள்ளப்படும்' என்று விளக்கவுரை கூறியுள்ளார் இளம்பூரணர். இக்கருத்தை, குற்றுகரம் குற்றிகரம் என்றிரண்டும் ஆய்தமும் ஒற்றும் எனவொரு நான்கொழிந்துக் } கற்றார் உயிரும் உயிர்மெய்யும் ஓதினர் எண்ணிச

"வஞ்சி'யின் சொல்லாட்சி!

Image
"வஞ்சி'யின் சொல்லாட்சி! By அ.கருப்பையா First Published : 31 March 2013 01:29 AM IST புகைப்படங்கள் பைந்தமிழ்ப் பெயராகவும், வினையாகவும் ஒரு சொல்லே நின்று பொருள் தந்து சிறக்கும். இத்தகைய சொற்கள் பேச்சிலும், எழுத்திலும் ஏராளமாகப் பயின்றுவரும். ஒரு பொருள் குறித்த பல சொற்களும், பல பொருள் குறித்த ஒரு சொல்லும் "உரிச்சொல்' எனும் பெயரில் பயின்று வருவதும் தமிழின் சிறப்புக்கு மற்றுமோர் அடையாளமாகும். பெயர்ச்சொற்கள், வினைச்சொற்கள் பற்றி தொல்காப்பியமும், (தொல்.சொல்.160, தொல்.சொல்.198) நன்னூலும், (நன்.275, 322) குறிப்பிடுகின்றன. "வஞ்சி' என்னும் சொல்லை ஒரு "வஞ்சி' தன் மனக்குமுறல் நிலையில் பெயராகவும், வினையாகவும் கையாளுகிறாள். அவள் ஒரு பருவ மங்கை. வாழ்க்கைத் துணைக்கு சிறந்த ஆடவனைத் தேடிப்பெறும் மனநிலையில் உள்ளாள். அவளது அழகையும், குடிப் பெருமையையும் அறிந்து, அருகமைந்த பேரூரிலிருந்து கட்டிளங்காளை ஒருவன் வருகிறான். இருவரும் கண்டனர்; காதல் கொண்டனர். களவு மணத்தால் அவள் நலனில் இன்புற்ற தலைவன் "குறித்த

தீர்வென்ன? - முனைவர் க.தமிழமல்லன்

Image